Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீட் மாற்றியதால் சிக்கல்.. வயதான தம்பதிகளுக்கு ரூ.48 ஆயிரம் பைன் கட்டிய ஏர்இந்தியா.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் சீட்டை மாற்ற கூடுதல் கட்டணம் வசூலித்த காரணத்திற்காக ஏர்இந்தியா நிறுவனம் வயதான தம்பதிகளுக்கு ரூ.48 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

சண்டிகரில் உள்ள நிரந்தர லோக் அதாலத் (பொது பயன்பாட்டு சேவைகள்) மையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சண்டிகரை சேர்ந்த வயதான தம்பதியர் டெல்லி-வான்கூவர் இடையே ஏர்இந்தியா விமானத்தில் செல்லும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் இருக்கைகளை மாற்றுவதற்காக ரூ.18,000 கூடுதல் பிரீமியமாக வசூலித்த காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Air India ordered to pay Rs 48,000 to elderly couple for changing their booked seats Rs 18,000

அந்த தம்பதிகளுக்கு 18 ஆயிரம் கட்டணம் + இழப்பீடு 30 ஆயிரம் என்று மொத்தமாக ரூ.48,000 செலுத்துமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புகார்: புகாரின்படி, சுனில் பார்ட்டி மற்றும் அவரது மனைவி கூசும் ஆகியோர் ஜூன் 6, 2022 அன்று, டெல்லி-வான்கூவர் விமானத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உள்ளனர். அதன்பின் இரண்டு இருக்கைகளை (41C மற்றும் 41A) கூடுதல் லெக்ரூமுடன் புக் செய்துள்ளனர்.

இதற்காக கூடுதலாக சுமார் ரூ.18,000 செலுத்தி சீட்டை தேர்வு செய்தனர். அவர்கள் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன் இந்த கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது.

சீட் மாற்றம்; ஆனால், ஜூன் 22 அன்று, டெல்லியில் இருந்து ஏறும் போது, ​​அந்த இரண்டு பயணிகளும் தங்களின் போர்டிங் பாஸ்கள் வெவ்வேறு இருக்கைகளுடன் (32E மற்றும் 32D) வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விமான பணியாளர்களிடம் விசாரித்தபோது, ​​அவர்கள் தம்பதியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், "இப்போது ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உட்காருங்கள் அல்லது போர்டிங்கை விட்டு வெளியேறுங்கள்" என்றும் கூறியதாக தெரிகிறது.

அந்த விமான நிறுவனம் சில விஐபிகளுக்கு தங்கள் இருக்கைகளை ஒதுக்கியதாக மூத்த குடிமக்கள் பின்னர் அறிந்தனர். கூடுதல் கட்டணம் வாங்கிக்கொண்டு கடைசியில் இப்போது வேறு சீட்டை மாற்றி உள்ளனர். அதுவும் விஐபிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று இடம் மாற்றி உள்ளனர்.

வழக்கு; இதையடுத்து அந்த தம்பதிகள் சண்டிகரில் உள்ள நிரந்தர லோக் அதாலத் (பொது பயன்பாட்டு சேவைகள்) மையத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஏர் இந்தியா அளித்த பதில் மனுவில்.. அந்த மனு தகுதியற்றது, விண்ணப்பதாரர் முழுமையான உண்மைகளை குறிப்பிடவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வாதம் வைத்து.

அவர்கள் வயதானவர்கள். அதனால் உடல்நலக்குறைவு காரணமாக எமர்ஜென்சி கதவிற்கு அருகே சீட் மறுக்கப்பட்டது. மற்றபடி இதற்கு வேறு காரணம் இல்லை. தம்பதியினர் மூத்த குடிமக்கள் என்பதால், சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரலின் வெளியேறும் வரிசை இருக்கை வழிகாட்டுதல்களின்படி, அவர்கள் அவசரகால வெளியேறும் இருக்கைகளில் அமர தகுதி பெறவில்லை

அதன் அடிப்படையிலே சீட் ஒதுக்கப்பட்டது என்று வாதம் வைத்தனர். ஆனால் ஏர் இந்தியா வாதம் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து சண்டிகரில் உள்ள நிரந்தர லோக் அதாலத் (பொது பயன்பாட்டு சேவைகள்) மையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் இருக்கைகளை மாற்றுவதற்காக ரூ.18,000 கூடுதல் பிரீமியமாக வசூலித்த காரணத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தம்பதிகளுக்கு 18 ஆயிரம் கட்டணம் + இழப்பீடு 30 ஆயிரம் என்று மொத்தமாக ரூ.48,000 செலுத்துமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+