அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்.. எத்தனை ஆண்டுகள் பழமையானது? ஏர் இந்தியா வாங்கியது எப்போது?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானம் முதல் முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் 787-8 போயிங் டிரீம்லைனர் விமானம் ஆகும். மிகவும் பாதுகாப்பாக பார்க்கப்படும் இந்த விமானத்தை ஏர் இந்தியா எப்பொது வாங்கியது? எத்தனை ஆண்டுகள் வரை இந்த விமானத்தை பயன்படுத்த முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 787-8 போயிங் டிரீம்லைனர் விமானம் இன்று பிற்பகல் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த 169 பயணிகளும், பிரிட்டனை சேர்ந்த 53 பயணிகளும், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பயணிகள், கனடாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 230 பயணிகளும், விமானிகள் இரண்டு பேர், ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

air-india-plane-crashed-in-ahmedabad-how-old-was-the-aircraft

விமான விபத்து

விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு வானில் பறக்க தொடங்கியது. 1.17 மணியளவில் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய விமானம் சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்து மே டே கால் அழைப்பு வந்துள்ளது. ஆனால், பதிலுக்கு விமானியை தொடர்புகொள்ளும் முன்பு இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. வானில் 825 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

வான் உயரத்திற்கு தீப்பிழம்புகள் எரிந்தன. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. விமானம் புறப்பட்ட உடனேயே விபத்தில் சிக்கியதால், அதில் எரிபொருள் அதிகம் இருக்கும் என்பதால் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்துள்ளது. விபத்து பற்றி அறிந்ததும், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார், மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து வருகிறார்கள்.

மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடம்

https://twitter.com/rajatkmishra1/status/1933115059917689035

பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் தான் இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் விடுதியில் தங்கியிருந்த மாணவ மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பேரழிவான விபத்து என்று ஏர் இந்தியா விமானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த விமானம் முதல் முறையாக விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

முதல் முறையாக விபத்தில் சிக்கியுள்ளது

* விபத்தில் சிக்கிய விமானம் 787-8 போயிங் டிரீம்லைனர் விமானம் மிகவும் பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது.
* முதல் முறையாக இந்த ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
* கடந்த 2014 ஜனவரியில் ஏர் இந்தியா வசம் இந்த விமானம் ஒப்படைக்கப்பட்டது.

* 11 ஆண்டுகள் 5 மாதம் இந்த விமானம் பயன்பாட்டில் இருந்துள்ளது.
* பொதுவாக நல்ல நிலையில் உள்ள ஒரு விமானத்தை 30 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
* அந்த வகையில், 30 ஆண்டுகள் பயன்படுத்தக் கூடிய இந்த போயிங் டிரீம்லைனர் விமானம் 11 ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+