தீபாவளிக்கு பின்..மோசமான நிலையை அடைந்த காற்று மாசு! சென்னையில் சுவாசிக்கவே சிரமம்! ஷாக் தந்த நம்பர்
சென்னை; தீபாவளி பட்டாசு காரணமாக தமிழ்நாடு முழுக்க காற்றின் தரம் மிக மோசமாகி உள்ளது. சென்னையில் கடுமையாக காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு 359 என்ற அளவை எட்டி உள்ளது.
நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் நேற்று சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் பட்டாசு வெடித்த காரணத்தால் காற்று மாசு மோசமாகி உள்ளது.

எல்லா வருடமும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கும். இந்த வருடமும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னை, டெல்லி, கொல்கத்தாவில் இன்று காற்று மாசு மோசமாகி உள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் உள்ளது. இது மிக மோசமான நிலைமை ஆகும். நீண்ட காலத்திற்கு வெளிப்படும் போது மக்கள் மீது இதை சுவாசிக்கும் போது கால ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
வேளச்சேரியில் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது: இது மிக மோசமான ஆரோக்கியமான நிலை ஆகும். இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடியில் தரக்குறியீடு 231ஐ தொட்டுள்ளது: இதுவும் ஆரோக்கியமற்ற நிலையாகும். செங்கல்பட்டில் தரக்குறியீடு 242ஐ தொட்டுள்ளது. ஏற்கனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.
புதுச்சேரியில் தரக்குறியீடு 243ஐ தொட்டுள்ளது. மதுரையில் தரக்குறியீடு 132ஐ தொட்டுள்ளது.
வரம்பு எப்படி?: 0-50: இந்த வரம்பு காற்றின் தரம் நன்றாக உள்ளது வரையறுக்கிறது, ஏனெனில் இது ஆரோக்கியத்தில் குறைந்த மக்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
51-100: இதுவும் திருப்திகரமான காற்றின் தர வரம்பாகும். ஆனால் இது சுவாச பிரச்சனை கொண்ட மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற விளைவுகளைக் ஏற்படுத்தலாம்.
101-200: மிதமான காற்றின் தரத்தை இது காட்டுகிறது. இதன் அர்த்தம் காற்று அதிக தரத்தில் இல்லை. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.
201-300: இந்த வரம்பில் AQI வீழ்ச்சியடைவது காற்றின் தரம் மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது . நீண்ட காலத்திற்கு வெளிப்படும் போது மக்கள் மீது இதை சுவாசிக்கும் போது கால ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும். ஏற்கனவே இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம்.
301-400: இந்த வரம்பு மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் காட்டுகிறது. இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. சென்னையில் தர்பூது காற்றின் தரம் இதுதான்.
401-500: இது AQI இன் கடுமையான வரம்பாகும். இது சாதாரண மற்றும் நோயுற்றவர்களுக்கு கூட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மோசமான காற்றின் தரம் உள்ள நகரங்கள் பின்வருமாறு:
பாட்னா 405
நொய்டா 402
டெல்லி 359
கொல்கத்தா 355 ஆகியவை ஆகும்.


Click it and Unblock the Notifications
