சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நான் தினமும் கோமியம் குடிக்கிறேன்".. லைவ் ஷோவில் அதிர வைத்த அக்‌ஷய் குமார்.. என்ன காரணம்?

பசுவின் சிறுநீரை குடிக்கிறேன் என நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "நான் தினமும் பசுவின் சிறுநீரை குடித்து வருகிறேன்.. ஏன் தெரியுமா?" என்று சொல்லி ஒரு ஷாக் தந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

உலக அளவில் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

Akshay Kumar says, I drink cow urine every day

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் "இன் டு தி வைல்ட்" என்ற நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொள்கிறார்.. இதற்காக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடந்த ஷூட்டிங்கிலும் பங்கேற்றார்.

அப்போது, அக்‌ஷய் குமாரும், கிரில்சும் யானையின் கழிவில் இருந்து தயாரான தேநீரை குடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.. இந்த நிகழ்ச்சியானது விரைவில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான ஒரு முன்னோட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பியர் கிரில்ஸ் உடன் லைவ் ஷோவில் தோன்றி பேசினார்.

 கனிமொழியின் அமைதியும் அப்செட்டும்.. என்ன காரணம்.. திமுகவில் வெடித்து கிளம்பும் ஆதரவு குரல்கள் கனிமொழியின் அமைதியும் அப்செட்டும்.. என்ன காரணம்.. திமுகவில் வெடித்து கிளம்பும் ஆதரவு குரல்கள்

அப்போது, பல்வேறு விஷயங்களை பற்றி பேசி கொண்டு வரும்போது, யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை குடித்தது பற்றி அக்‌ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அக்‌ஷய்குமார், "யானையின் மலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் எனக்கு பெரிசா சிரமங்கள் எதுவும் இல்லை.. ஏன்னா, தினமும் நான் பசுவின் சிறுநீரை குடித்து வருகிறேன்.. அது தெரியுமா உங்களுக்கு? நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.. ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடித்து வருகிறேன். எனவே அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை" என்றார்.

English summary
Akshay Kumar says, I drink cow urine every day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X