Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆலந்தூர் டூ ஆதம்பாக்கம்.. சூப்பர் செய்தி வந்தாச்சு.. மொத்தமா மாறுது சென்னை.. துள்ளிகுதிக்கும் கிண்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி மக்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் இதுகுறித்து உறுதியும் தந்துள்ளார்.
சென்னை மவுன்ட் மற்றும் கிண்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியாக ஆலந்தூர், ஆதம்பாக்கம் போன்றவை உள்ளன.. இங்கு முன்புஒருமுறை LC 15 என்ற ரயில்வே கேட் இருந்தது.

இந்த ரயில்வே கேட்டிற்கு 2 பக்கமும், நிறைய ஸ்கூல்கள் உள்ளன.. இதைத்தவிர, ஆலந்துாரில் காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள் போன்றவையும் இருக்கின்றன.. எனவே, ஆயிரக்கணக்கான மக்கள், இந்த ரயில்வே கேட்டைதான் தினமும் பயன்படுத்தி வந்தனர்.

Alandur to Adambakkam and When is the railway flyover coming up between Alandur Adambakkam

என்ன நடந்தது: ஆனால், நாளுக்கு நாள் சென்னை புறநகர் பல மடங்கு விரிவாக்கம் அடையவும், அதிக அளவில் மின்சார ரயில்கள் இந்த பகுதியில் இயக்கப்பட்டன. ..

ஒருகட்டத்தில் புறநகர் பகுதிகளிலுள்ள ரயில்வே கேட்டுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், ஆலந்தூர் நிதிப் பள்ளி அருகில் இருந்த, LC 15 ரயில்வே கேட்டும், கடந்த 2002ல் மூடப்பட்டுவிட்டது. எனினும், இந்த வழித்தடத்தைதான், நிறைய பேர் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி பள்ளி மாணவர்கள் விபத்துகளில் நேரிடுகிறது.

கையெழுத்து இயக்கம்: எனவே, மூடப்பட்ட LC 15 பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.. இதற்காகவே கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.

இதையடுத்து இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 2011ம் ஆண்டு சுரங்கப்பாதை பாதை அமைக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 5 கோடி ரூபாய் நிதியில் அமைக்க திட்டமிடப்பட்டது... இதில், ரயில்வே பங்காக, ரூ.2.91 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. 2013ல் பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், வேறு சில நடைமுறை சிக்கலால், இந்த சுரங்கப்பாதை திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது.

முடங்கியது: இதன்காரணமாக, இதே பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுக்கப்பட்டன.. இதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.. 2.71 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்கவும் முடிவானது. ஆனால், அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.

அத்துடன், ஒதுக்கப்பட்ட அதே நிதியுடன், தற்போது நடைமேம்பாலம் அமைக்க முடிவாகி உள்ளது. இதற்கான பணிகளும் துரிதமாக துவங்கி உள்ளன. விரைவில் மேம்பாலம் வந்துவிடும் என்று அந்த தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தொடர்ந்து நம்பிக்கை தந்து வருகிறார்.

Alandur to Adambakkam and When is the railway flyover coming up between Alandur Adambakkam

நேற்றுகூட இந்த நடைமேம்பாலம் பற்றி பேசியிருந்தார்.. ஆலந்தூர், ஏஜெஎஸ் மேல்நிலைப்பள்ளி, நங்கநல்லூர் நேரு மேல்நிலைப்பள்ளி போன்றவற்றில் படிக்கும் 525 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வழிவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பரசன், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

உறுதி: அப்போது அவர் பேசும்போது, ஆலந்தூர் - ஆதம்பாக்கம் இடையே செல்லும் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரூ.2.5 கோடியில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்பட்டு விரைவில் பணி தொடங்க உள்ளது" என்றார்.

இதையடுத்து, விரைவில் மேம்பாலம் வரப்போவதால், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+