ஓபிஎஸ் மனைவி மறைவு.. சட்டசபையில் இருந்து மொத்தமாக மருத்துவமனைக்கு வந்த எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவை தொடர்ந்து அவர் உடல் வைக்கப்பட்டுள்ள பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் புறப்பட்டு வந்தனர். சட்டப்பேரவைக்கு வருகை தந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் , மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு (வயது 63) இன்று காலை திடீரென மாரைடப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அருகில் இருந்த பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜயலட்சுமி காலமானார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த தகவலை கேட்டு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு வந்து விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எம்எல்ஏக்கள்
இதனிடையே இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளையில், சட்டசபை கூட்டத்திற்கு புறப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும், நேராக ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டுள்ள பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு வந்தனர்,.
அங்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் தெரிவித்தனர்
அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமின்றி திமுக எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் இன்றைக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் உள்படபல்வேறு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

பொதுமக்கள் அஞ்சலி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு சென்னையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மனைவி மறைவால் உடைந்து போன ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications