என்ன ‘துறை’யா இருந்தா என்ன? இந்த ‘அய்யாத்துரை’யின் நாளங்கள் தான்.. முதல்வர் ஸ்டாலின் சிலேடை பேச்சு!
சென்னை : "எனக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறைகளின் பொறுப்புகளை வகித்தாலும், நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் நாளங்கள் தான்." என அண்ணா பற்றி கருணாநிதி பேசியதைக் குறிப்பிட்டு சிலேடையாகப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நேற்று முதல் முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர்சிங் ஐபிஎஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "நான் முதலமைச்சராக இருந்தாலும் எனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை தான் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையில் கடைசி துறையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளுமே எனது துறை என்பதால் தான் அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி, மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளிக்கும்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியதை சுட்டிக்காட்டினார். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு துறைகளையும் குறிப்பிட்ட கருணாநிதி, நாம் வகிக்கும் துறைகள் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் அண்ணாதுரையைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டதை எடுத்துச் சொன்னார்.

எனக்கு எனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. எனவே, இன்றைக்கு அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறைகளின் பொறுப்புகளை வகித்தாலும், நீங்கள் அனைவரும் இந்த அய்யாத்துரையின் நாளங்கள் தான்." என சிலேடையாகப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் பேசிய ஸ்டாலின், "நாம் ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடி இருந்த நிலையிலும், பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து மகத்தான சாதனை புரிந்துள்ளோம். 1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளதால் இனி தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications