சரியாக கொரில்லாக்களை குறி வைத்து.. உலகம் முழுக்க பரவும் புதிய பிரச்சனை.. அதுவும் ஸ்மார்ட் போன் மூலம்
சென்னை: உலகம் முழுக்க கொரில்லா இடையே புதிய அடிமை பழக்க வழக்க முறை ஒன்று ஏற்பட்டு வருவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
21ம் நூற்றாண்டில் மனிதர்கள் பலர் அதிகம் அடிமையான விஷயம் என்றால் அது டிஜிட்டல் ஸ்க்ரீன்தான். குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை எல்லோரும் போன் பயன்படுத்துவது அதிகம் ஆகி உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ் தொடங்கி பேஸ்புக் வரை நேரம் செல்வதே தெரியாமல் மக்கள் எந்நேரமும் போன் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து உள்ளது.

கொரில்லாக்கள்: பலர் காலையில் எழுந்தவுடன் போனை எடுத்தால் இரவு தூங்கும் வரை போனை நோண்டும் அளவிற்கு அடிமையாகி உள்ளனர். மருத்துவர்கள் பலர் கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்க, சரியாக யோசிக்க போன்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனாலும் பலரால் போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் மட்டுமின்றி தற்போது குரங்குகளுக்கும் பரவி உள்ளதுதான் பரிதாபம்.
அமெரிக்கா கொரில்லா: ஆம் அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று போனுக்கு அடிமை ஆகி உள்ளது. 16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு அங்கு செல்போன் பார்க்க அடிமை ஆகி உள்ளது. அந்த அமேரா குரங்கு சொந்தமாக போன் வைத்திருக்கவில்லை. அந்த குரங்கிடம் அங்கு கண்ணாடி ஸ்கிரீன் மூலம் போன் வீடியோக்களை காண்பித்துள்ளனர். முக்கியமாக குரங்கு வீடியோக்களை காண்பித்துள்ளனர்.
அடிமை: இதை பார்த்த பலர் அங்கு வரிசையாக அந்த குரங்கிற்கு வீடியோவை காண்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வரிசையாக பல வீடியோக்களை பார்த்த குரங்கு.. அதன்பின் மக்கள் யார் வந்தாலும் அவர்களிடம் போனை கேட்டு சைகை செய்ய தொடங்கி இருக்கிறதாம். யாராவது வீடியோ போட்டால் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்து பார்த்து வருகிறதாம். அந்த குரங்கு வீடியோ பார்க்காத நாட்களில் சரியாக சாப்பிடுவது இல்லை என்று கூறப்படுகிறது.
அதிர்ச்சி சம்பவம்: வீடியோ பார்ப்பதே அந்த குரங்கிற்கு வழக்கம். மற்ற நேரங்களில் கோபமாக இருக்கும். மற்ற ஆண் குரங்குகள், பெண் குரங்கிடம் கூட அது பேசாது. அந்த அளவிற்கு மோசமாக அமேரா குரங்கு நடந்து கொள்கிறது. அதை தற்போது கண்காணித்து வருகிறோம். அந்த குரங்கு கண்டிப்பாக போனுக்கு அடிமையாகி உள்ளது தெரிகிறது. இங்கே வரும் மக்களை அதனிடம் போனை காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்று சரணாலய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு ஒன்று இப்படி போனுக்கு அடிமையான சம்பவம் சரணாலய ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கொரில்லா இல்லை: ஆனால் இந்த ஒரு கொரில்லா மட்டும் இப்படி போனுக்கு அடிமை ஆகவில்லை. சீனாவில் உள்ள தேசிய சரணாலயத்தில் இதே போல் கொரில்லா ஒன்றிற்கு போன் அடிமை பழக்கம் ஏற்பட்டு உள்ளது. போன் வீடியோக்களை பார்க்காமல் அதனால் இருக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
உலகம் முழுக்க கொரில்லா இடையே இந்த புதிய அடிமை பழக்க வழக்க முறை ஏற்பட்டு உள்ளது. அதன்படி உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள சரணாலயங்களில் கொரில்லாக்கள் இப்படி போனுக்கு அடிமையாவதாக செய்திகள் வெளியே வர தொடங்கி உள்ளன. மனிதர்கள், கொரில்லாக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சுபாவம் கொண்டவை என்பதை கொரில்லாக்கள் அடிமையாக இது முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications