தொகுதி மறுவரையறை பற்றி அறிவிப்பே இல்லை- ஏன் ஆலோசனை? அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக சரமாரி கேள்வி
சென்னை: தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசோ, பிரதமர் மோடியோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவே இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு ஏன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது? என்று டிடிவி தினகரனின் அமமுக கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அமமுகவின் செந்தமிழன் இதனை எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அமமுகவின் பிரதிநிதி செந்தமிழன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனின் அறிக்கையை வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தொகுதி மறுசீரமைப்பு எனும் பெயரில் தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலோ அல்லது தமிழகத்தை விட வடமாநிலங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலோ அதனை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. இது தான் எங்கள் இயக்கத்தின் நிலைப்பாடு என்பதை கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் படி எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission of India) அமைக்கப்பட்டு அதன் பின்னரே தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன.
அந்த வகையில் இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு பணிக்கான எந்த ஒரு முன்கட்ட பணிகளையும் மத்திய அரசு இதுவரை தொடங்காத நிலையில், தமிழகத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டதாக மாநில அரசே உறுதி செய்து கொள்வது ஏன்? எதன் அடிப்படையில் மாநில அரசு இந்த முடிவை எடுத்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கு முன்பாக மற்றுமொரு தகவலையும் தமிழக அரசிடம் இந்நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் இதே பிரச்னைக்காக தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சரியாக ஓராண்டை கடந்திருக்கிறோம். அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதோடு அப்படியே நிற்கிறது.
2024 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன? மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்காத தமிழக அரசு, அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? எந்த புள்ளியின் அடிப்படையில் தற்போது மீண்டும் இந்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறோம்? போன்ற மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கங்களை இக்கூட்டத்தின் முடிவிலேயே வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்.
அதே நேரத்தில் மத்திய அரசோ, பிரதமர் மோடியோ தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக தாமாகவே முன்வந்து பேசி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே கருத தோன்றுகிறது.
தற்போது கூடியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம் உண்மையாகவே தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக இருந்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மனப்பூர்வமாக வரவேற்கிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை திசைதிருப்பவே இந்த கூட்டம் என்றால் கழகம் கண்டிக்கவும் தயங்காது என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அமமுக தெரிவித்துள்ளது.
-
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்











Click it and Unblock the Notifications