நச்சுன்னு 5 பாயிண்ட்களை சொன்ன விசிக.. அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள்..!
திருமாவளவன் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் சில கோரிக்கைகள் முன்வைத்தார்
சென்னை: நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ள நிலையில், இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. நீட் தேர்வுக்கு திமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தங்கள் எதிர்ப்வை காட்டி வருகின்றன.
இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.. ஆனால் இப்போது வரை மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவே இல்லை.

முதல்வர்
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச்சு நடத்த தமிழக எம்பிக்கள் 4 முறை அனுமதி கேட்டுள்ளனர்.. ஆனால் 4 முறையுமே அவர்களை சந்திக்காமல் அமித்ஷா தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் ஸ்டாலின் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அதைநேற்று முன்தினம் சட்டப்பேரவையிலும் தன் பேச்சில் வெளிப்படுத்தினார்.

அனைத்து கட்சி கூட்டம்
"அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.. அத்துடன் அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்" என்று அறிவித்திருந்தார்.

அனைத்து கட்சி
அதன்படியே, இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விசிக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.. அந்த கோரிக்கைகளை ஒரு அறிக்கையாகவும் அக்கட்சி தன்னுடைய அதிபாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கை இதுதான்: 1. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் எவ்வித காரணமுமின்றி முடக்கி வைத்துள்ள தமிழக ஆளுநரின் செயல் தமிழக சட்டப்பேரவையையும், தமிழக அரசையும், தமிழக மக்களையும் அவமதிப்பதாகும்.

வருத்தம்
2. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆளுநரின் நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்ட அனைத்துக் கட்சி குழுவினருக்கு நேரம் ஒதுக்காமல் ஒரு வார காலம் டெல்லியில் காத்திருக்கச் செய்து அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கட்டணம்
3. நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டமாகும் வரை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்பதால், தமிழ் வழியில் தேர்வு எழுதி நீட் தேர்வில் தகுதிபெறும் ஏழை, எளிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி சேருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அரசே அந்த கட்டணம் முழுவதையும் வட்டியில்லா கடனாக வழங்குவதற்கு 'கடன் படிப்பு உதவித் தொகை' திட்டமொன்றை வகுத்திட வேண்டும். மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என வரம்பு நிர்ணயிக்கலாம்.

அவசர சட்டம்
4. தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தமிழகத்தில் 400க்கும் அதிகமான தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.5,750 கோடி சம்பாதிப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 99% பேர் இந்த மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். இந்த மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த எந்தவொரு சட்டமும் நமது மாநிலத்தில் இல்லை. எனவே இந்தப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்.

நீதிபதி ஏகே ராஜன்
5. நீட் வருவதற்கு முன்பு தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் சுமார் 15% பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். வந்ததற்குப் பிறகு தமிழ்வழியில் படித்த மாணவர்களில் 2%க்கும் குறைவானவர்களே சேர்ந்துள்ளனர் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. எனவே அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் தமிழ்வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதோடு அவற்றின் தரத்தை தனியார் பயிற்சி மையங்களின் அளவுக்கு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்" என்று அறிக்கையில் விசிக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications