5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து.. தமிழக பள்ளிகளுக்கு பொருந்துமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

all pass new education policy central government

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு.

இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும்” என்று கூறியுள்ளார்.

கல்வியாளர்கள் சொல்வது என்ன?: கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 என்கிற சட்டத்தின் சிறப்பு அம்சமே, குழந்தைகள் கல்வியை பார்த்து பயப்பட கூடாது என்பதுதான். எனவேதான் இந்த சட்டத்தில் 8ம் வகுப்பு வரை வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வுகள் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஏதோ மேம்போக்கானதாக கொண்டுவரப்படவில்லை.

உலகம் முழுவதும் உள்ள கல்வி முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆசியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதில், எந்தெந்த மாணவர்கள் கற்றலில் பின்தங்குகிறார்களோ, அவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்களை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும். இது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய திருத்தத்தை மேற்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+