நெல்லை - திருச்செந்தூர் ரூட் கிளியர்! 20 நாட்களுக்கு பிறகு பயணிகள் மகிழ்ச்சி! ரயில்வே அறிவிப்பு
சென்னை: மழை வெள்ளத்தால் தண்டவாளம் சேதம் அடைந்ததால் நெல்லை- திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த இந்த மழையால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ள பாதிப்புக்கு ரயில் தண்டவாளமும் தப்பவில்லை.

ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் மழை வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் அடித்து சென்றது. அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை வெள்ள நீர் அடித்து சென்றது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் உதவாத அளவுக்கு தண்டவாளம் சேதம் அடைந்தது. 17 ஆம் தேதி திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்: இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மழை விட்டு வெள்ள நீர் வடிந்த பிறகு தண்டவாளத்தை சீர் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன் தினம் ஆழ்வார்திருநகரி - நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டது. பின்னர் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்றும் ரயில்வே அறிவுறுத்தியிருந்தது.
நாளை முதல் சேவை: சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், நாளை திருச்செந்தூர் - நெல்லை இடையேயான வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சீரடையும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 20 நாட்களுக்கு பிறகு நெல்லை- திருச்செந்துர் வழித்தடத்தில் பயணிகள் ரயில்சேவை வழக்கம் போல் இயக்கப்பட இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று முதல் சேவையை தொடங்குகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications