உள்ளதும் போச்சே.. “டோட்டல் டேமேஜ்”.. பெரும் தலைகளை களத்தில் இறக்கி மொத்தமாக கோட்டை விட்ட பாஜக!
சென்னை: பாஜக, இந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முன்னாள் ஆளுநர், மத்திய அமைச்சர், மாநில தலைவர், சட்டசபை குழு தலைவர் என “பெரும் தலை”களை களத்தில் இறக்கியது. எனினும், அத்தனை பேரும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜன்: நான்கரை ஆண்டு காலமாக தெலுங்கானா ஆளுநராகவும், 3 ஆண்டுகளாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்து வந்த தமிழிசை கடந்த மார்ச் 18ஆம் தேதி தான் வகித்துவந்த இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்தார். உடனே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். வசதியான ஆளுநர் பதவியை துறந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வருகிறேன். அதில் அன்பை புரிந்து கொள்ளுங்கள் என மக்களிடம் பேசி வாக்கு சேகரித்தார் தமிழிசை சௌந்தரராஜன்.
2006ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன் இதுவரை வென்றதே இல்லை. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தான் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடியின் கனிமொழி கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். தற்போது தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
எல்.முருகன்: மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார்.
அவரது பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். எல்.முருகனின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி இன்னும் 6 ஆண்டுகள் உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் நிறுத்தப்பட்டார் எல்.முருகன். இந்நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசாவிடம் தோல்வி அடைந்துள்ளார் எல்.முருகன்.
நயினார் நாகேந்திரன்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.
நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக உள்ள நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரனையே வரும் மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் களமிறக்கியது பாஜக. 4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன் தற்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
அண்ணாமலை: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை, லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தொடர்ந்து கூறி வந்தார். தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காகத்தான் நான் வந்துள்ளேன், டெல்லிக்கு செல்லும் திட்டம் இல்லை எனக் கூறி வந்தார் அண்ணாமலை.
பாஜகவின் மாநில தலைவராக பதவியேற்றது முதல் பாஜகவை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று 'என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அண்ணாமலையின் வருகைக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் தான் தற்போது அண்ணாமலை கோவையில் போட்டியிட்டார்.
டோட்டல் டேமேஜ்: 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்ற போக்கில் சென்று கொண்டிருந்தவரை இந்த லோக்சபா தேர்தலில் களம் இறக்கியது பாஜக தலைமை. அண்ணாமலை இந்த தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்ட போதும், தற்போது இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.
கோவையில் வென்றால் அண்ணாமலைக்கும் மைலேஜ் கிடைக்கும், கட்சிக்கும் லாபம் என கணக்கு போட்டது பாஜக. மிக அதிகமாக ஹைப் கொடுக்கப்பட்ட அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளதால் பாஜக பெறும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை கூறி வந்த நிலையில், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
மத்திய அமைச்சர் எல்.முருகனையும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தமிழிசை சௌந்தரராஜனையும், சிட்டிங் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனையும், 2026 முதல்வர் வேட்பாளராக தயாராகும் அண்ணாமலையையும் தேர்தல் களத்தில் நேரடியாக இறக்கி விட்டு பெரிய அடியை வாங்கியுள்ளது பாஜக.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications