மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னையில் 1980க்கு பிறகு இந்த முறை தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளது.
நமது நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடந்து வெள்ளிக்கிழமை அமைதியாக முடிந்த நிலையில், நாடு முழுக்க இருக்கும் 102 தொகுதிகளில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி உள்ளது..

தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளிலும் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்த நிலையில், அங்கே 72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது.
வாக்குப்பதிவு: கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களிலேயே தான் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கிறது. இந்த முறை தலைநகர் சென்னையில் மற்ற தொகுதிகளை விடச் சென்னையில் வாக்குப்பதிவு குறைவு என்றாலும் கூட தேர்தல்களுடன் ஒப்பிடும் போது கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 1980க்கு பிறகு சென்னையில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வடசென்னை: சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வடசென்னையில் தான் எப்போதும் சற்று அதிகமாக இருக்கும். வட சென்னையில் கடந்த முறை 64% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கிட்டதட்ட 69% வாக்குகளே பதிவாகி இருந்தது. வடசென்னையில் 2004 - 45%, 1999 - 43%, 1998- 46%, 1996- 55%, 1991- 55%, 1989- 60%, 1984- 51% வாக்குகளே பதிவாகி இருந்தது. அதை விட இந்த முறை அதிகமாகும். 1980இல் வடசென்னையில் 71% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது மீண்டும் அதிகபட்சமாக 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மத்திய சென்னை: மத்திய சென்னையில் கடந்த முறை 58% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், இந்த முறை 67% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கூட இங்கு 61% வாக்குகளே பதிவாகி இருந்தது. மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரை 2004 - 49%, 1999 - 48%, 1998- 49%, 1996- 57%, 1991- 54%, 1989- 60%, 1984- 64% வாக்குகளே பதிவாகி இருந்தது. 1980இல் மத்திய சென்னையில் 67% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது மீண்டும் அதே அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.
தென் சென்னை: அடுத்து தென்சென்னை தொகுதி.. இங்கு இந்த முறை மும்முனை போட்டி நிலவும் நிலையில், இங்கு 67% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடும் போது இது 10% அதிகமாகும். கடந்த 2009, 2014 தேர்தல்களிலும் கூட இங்கு முறையே 62% மற்றும் 60% வாக்குகளே பதிவாகி இருந்தது. தென் சென்னை தொகுதியைப் பொறுத்தவரை 2004 - 47%, 1999 - 45%, 1998- 47%, 1996- 56%, 1991- 53%, 1989- 59%, 1984- 65% வாக்குகளே பதிவாகி இருந்தது. 1980இல் இங்கு 68% வாக்குகள் பதிவான நிலையில், இப்போது 67% வாக்குகள் பதிவாகி இருக்கிறது..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications