மின்வாரிய ஊழியர்கள் எந்தக் காரணம் கொண்டும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யக்கூடாது.. கடும் வார்னிங்
சென்னை: மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மண்டல தலைமை என்ஜினீயர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. மேலும் பொதுமக்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அந்த அறிவிப்பில், அனைத்து மின்வாரிய அலுவலர்களும் தங்கள் செல்போனை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மண்டல தலைமை என்ஜினீயர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. மேலும் பொதுமக்களுக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்
* மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக ஆஸ்பத்திரிகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் கோபுரங்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
* சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் பில்லர் பாக்ஸ்கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை சார்ந்த செயற் என்ஜினீயர்கள் மற்றும் உதவி செயற் என்ஜினீயர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்.
* அனைத்து அலுவலர்களும் தங்கள் செல்போனை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொதுமக்கள், மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
* தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
* ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
* வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications