சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் இன்று முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம்
சென்னை: சென்னையில் ஓடும் புறநகா் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும், 12 வயதுக்குட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி இன்று (டிசம்பர் 14முதல்) பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள்பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு, படிப்படியாக இயங்க தொடங்கி உள்ளன. புறநகா் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட போதிலும்,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார்நிறுவன ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவா்களுக்கு டிக்கெட் கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல்( இன்று முதல்) புறநகா் மின்சார ரயில்களில் அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூா் வழியாக அரக்கோணத்துக்கு சுற்றுவட்டப்பாதை ரயில் சேவையும் இன்று முதல் (டிசம்பா் 14-ஆம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரையை மீண்டும் அடையும். மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருமால்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரையை அடையும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications