சென்னைக்கே குட் நியூஸ்.. முழுமையாக ரெடியான யானை கவுனி மேம்பாலம்.. எப்போது திறக்கப்படும்? அப்டேட்
சென்னை: யானை கவுனி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் நிறைவடைந்துள்ளது என்றும் இன்னும் 10 நாட்களில் யானை கவுனி மேம்பாலம் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீட்டர் நீளத்துக்கு சாய்தள சாலை மாநகராட்சி ரூ.30 கோடி செலவிலும், ரயில்வே துறை மூலம் ரூ.40 கோடியே 48 லட்சத்திலும் என மொத்தம் ரூ.71 கோடியே 26 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் இருந்த யானைகவுனி மேம்பாலம் மிகவும் பழமையானது. இது ஒரு கட்டத்தில் மிகவும் பழுதடைந்தது. இதையடுத்து கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2016ல் இந்த பாதை முற்றிலுமாக மூடப்பட்டது.
இப்பாலத்தில் 50 மீட்டர் நீளமுள்ள பகுதி ரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீட்டர் அளவுக்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இரு புறமும் 364.23 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி, வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீட்டர் நீளத்துக்கு சாய்தள சாலை மாநகராட்சி ரூ.30 கோடி செலவிலும், ரயில்வே துறை மூலம் ரூ.40 கோடியே 48 லட்சத்திலும் என மொத்தம் ரூ.71 கோடியே 26 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையைச் சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதை கடந்த மார்ச் மாதம் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
யானைக்கவுனி மேம்பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை பணி, இருவழிப்பாதையகா மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மற்றொரு வழிப்பாதைக்கான பணி நடைபெற்று வந்தது. தற்போது மேம்பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. இதனால், இன்னும் 10 நாளில் மேம்பாலத்தை திறக்க ஏற்படுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேப்பேரிக்கும் - ஜார்ஜ் டவுனுக்கும் இடையே செல்லும் சரக்கு வாகனங்கள் போன்றவை பேசின் பாலத்தை சுற்றிக்கொண்டு செல்லும் நிலையில் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் கணிசமாமாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் இடையே நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications