அமைச்சர் வீட்டில் டீ, சோறு..வேல்முருகன் கோபம்! கூட்டணியில் இருக்கீங்களா? இல்லையா? துரைமுருகன் சுளீர்
சென்னை: நீங்கள் பேரவைக்குள் பேசும்போது கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள் ஆனால், பேரவைக்கு வெளியில் பேசும்போது எங்களுக்கு எதிராக பேசுகிறீர்கள் அதில் (கூட்டணி) இருக்கிறீர்களா? இல்லையா.? வேல்முருகன் தெளிவாக சொல்ல வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகனை பார்த்து கேள்வி எழுப்பினார் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
2025ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த ஆண்டு ஆளுநர் உரையை ஆளுநர் புறக்கணித்தது கடும் சர்ச்சையானது.

ஆளுநர் அவையில் இருந்த போது தேசிய கீதத்தை இசைக்க சொல்லியதாகவும் ஆனால் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அவர் அவையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த செயலை கண்டித்து தமிழகத்தில் திமுக போராட்டத்தை முன்னெடுத்தது.
தமிழக சட்டசபை:
இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகிறது. அந்த தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று பேசினார். அப்போது அவருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது. அவையில் பேசிய வேல்முருகன், " அரசிடம் உரிமையோடு நான் முன்வைக்கும் கோரிக்கைகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை
தவாக வேல்முருகன்:
ஒவ்வொரு முறையும் முதல்வர் கார் வரை சென்று..என் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர்களிடம் கூறுங்கள் என்கிறேன்.. ஆனால் என் கோரிக்கையை அமைச்சர்கள் யாருமே நிறைவேற்றுவதில்லை. என்ன பாவம் செய்தேன் நான். திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன் தம்பி திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள்
அமைச்சர் துரைமுருகன்:
அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீ தான் கொடுக்கிறார்கள்; கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன்," நீங்கள் பேரவைக்குள் பேசும்போது கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள் ஆனால், பேரவைக்கு வெளியில் பேசும்போது எங்களுக்கு எதிராக பேசுகிறீர்கள் அதில்(கூட்டணி) இருக்கிறீர்களா? இல்லையா.? வேல்முருகன் தெளிவாக சொல்ல வேண்டும்" என்றார்.
திமுக குடும்பம்:
அதற்கு பதிலளித்த தவாக வேல்முருகன்," சென்சிட்டிவாக நான் பேசும்போது, நகைச்சுவையாக பேசி எனது கோரிக்கைளின் வீரியத்தை துரைமுருகன் குறைத்து விடுகிறார். எதிரணியில் இருந்தபோது கூட கருணாநிதி என் கோரிக்கையை நிறைவேற்றினார்; தற்போது கூட்டணியில் இருந்து பயனில்லை. நானும் ஒரு காலத்தில் திமுக காரன்தான், பாமக உருவான பிறகுதான் திமுகவில் இருந்து விலகி பாமகவிற்கு சென்றேன். அதற்கு முன் திமுக பேச்சாளனாக இருந்தேன், அந்த உரிமையில் கேட்கிறேன்: என்றார்.
மு.க.ஸ்டாலின்:
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனால்தான் உதய சூரியனில் நின்று நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்" என்றார். அப்போது அவையில் இருந்த திமுக எம்எல்ஏக்கள் மேசையை தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர். கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் அந்த கட்சி குறித்து விமர்சித்து வருகிறார். மேலும் தனது தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் செய்யப்படவில்லை என வேல்முருகன் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications