117 சீட் வேண்டும்.. இரண்டரை வருடம் முதல்வர் பதவி.. எடப்பாடியிடம் பேசிய தவெக? அதிமுக ஸ்டாண்ட் என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. அதிமுகவிடம் 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்-விஜய் சந்திப்பு, ஆலோசனை ஆகியவைதான் கடந்த 3 நாட்களாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின. விஜய் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக பி.கே. நியமிக்கப்படவிருக்கிறார் என செய்திகள் பரவின. பிரஷாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. பிகே இப்போது ஐபேக்கில் இல்லை. இதனால் அவர் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக வர மாட்டார். ஐபேக்கும் வராது. (ஐபேக் திமுகவிடம் மீண்டும் செல்வதாக பேச்சு உள்ளது)

திமுகவை வீழ்த்துவதுதான் உங்கள் லட்சியமெனில் அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள். தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை உங்கள் கட்சி வாங்கலாமே தவிர, வெற்றிக்கான உத்தரவாதம் கிடையாது. வெற்றியில்லாத எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும் அதில் பலனில்லை. ஒருவேளை, நீங்கள் தனித்து போட்டியிட்டு, திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டால் அடுத்த 5 வருடத்தில் உங்கள் கட்சியை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் திமுகவினர்' என்றெல்லாம் யோசனை தெரிவித்திருக்கிறார் பி.கே. !
இந்த நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி:
அதில், அதிமுக - தவெக பேச்சு வேலைக்கு ஆகவில்லை. அதிமுகவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். ஆனால் இவர்கள் எல்லாம் இல்லாமல் கட்சி பலமின்றி உள்ளது. இதைத்தான் செங்கோட்டையன் மறைமுகமாக சொல்லி உள்ளார். கட்சியில் மற்றவர்களுக்கு மதிப்பு இல்லை.. ஜெயலலிதா, எம்ஜிஆருக்கே மதிப்பு இல்லை என்பதை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்.
வரப்போகிற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா சாவா தேர்தல் என்றுதான் நான் பார்க்கிறேன். இப்போது செங்கோட்டையனை எடப்பாடி சமாளித்தாலும் எதிர்காலத்தில் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்படும். தொண்டர்களை சமாளிக்க பிரசாந்த் கிஷோர் வருகிறார் தமிழக வெற்றிக்கழகம் கூட கூட்டணி வைக்க போகிறோம் என்று அதிமுகவில் செய்திகளை வெளியே பரப்பி விடுகிறார்கள்.
ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை. தொண்டர்களை இப்போது சமாளிக்க இப்படி செய்கிறார்கள். அதிமுக தமிழக வெற்றிக் கழக கூட்டணி பேச்சுவார்த்தை மூவ் ஆகவில்லை. இன்னொரு பக்கம் பாஜக அதிமுக நம் பக்கம்தான் வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. பாஜக எப்படியும் அதிமுக தங்கம் பக்கம் வரும் என்பதில் உறுதியாக உள்ளது.
அதிமுகவும் எப்படியும் பாஜக பக்கம்தான் செல்லும். தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது.
நாம் சமமான பலம் உள்ளவர்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் நினைக்கிறது. பிரசாந்த் கிஷோர் சொன்னதை வைத்து இப்படி செய்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தி என்று பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். அதனால் இரண்டாம் பவராக மாறிவிட வேண்டாம். முதன்மை பவராக இருங்கள். பாஜக போல மாறிவிட வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications