துரைக்கண்ணு மறைவு.. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமைச்சர் துரைகண்ணு மறைவை அடுத்து அவர் வகித்த வேளாண்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வேளாண் துறை அமைச்சருமான துரைக்கண்ணு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி காலாமானார்.

இதையடுத்து அவர் வகித்த வேளாண்துறை அமைச்சர் பொறுப்பு காலியாகி உள்ளது. அந்த பொறுப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications