Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் சீட் ஒதுக்குவது என் உரிமை.. அப்பாவு உறுதி.. அதிமுகவினர் அமளி.. கூண்டோடு வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு கூறிய பதிலில் திருப்தி இல்லை என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சட்டசபையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து இன்று அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்றாவது நாளான இன்று நிறைவடைகிறது. கேள்வி பதில் விவாதத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்கும் பதில் அளித்தார்.

Allotment of seats in the assembly is my right says Appavu admk mlas evicted from assembly

இதனையடுத்து இன்று எதிர்கட்சித்துணைத்தலைவர் இருக்கை விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதனையடுத்து சட்டசபையிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.பி.உதயகுமார் புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அதிமுக தரப்பில் இது தொடர்பாகச் சபாநாயகருக்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. அதாவது இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது அவரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதால் அங்கே ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.. இருப்பினும், சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகரின் தனிப்பட்ட முடிவு என்றே சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து கூறியிருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக அதிமுகவினர் அண்மையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்தும் முறையிட்டனர்.

அதனை ஏற்க அப்பாவு மறுத்து விட்டார். இன்றைய தினம் சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இருக்கை ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்று கூறினார். யாருக்கு எந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, கட்சிப்பிரச்சினையை நீக்க வேண்டிய இடம் இது இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

இதனை ஏற்க மறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினர்.

உள்கட்சி பிரச்சினையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். அதிமுக தலைமை குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானதுதான் என்றும் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். சட்டசபையில் இருக்கை விவகாரம் தொடர்பாக அமளி துமளி ஏற்பட்டதால் பெறும் பரபரப்பு நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+