"நான் பச்சை தெலுங்கன்.." கடத்தல் மன்னன் "முருகன்.." தமிழர்களை சீண்டுகிறதா "புஷ்பா?" இது தப்பு அல்லு!
சென்னை: அல்லு அர்ஜுன் நடித்து நேற்றைய தினம் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தமிழக போலீஸாரை நேர்மையில்லாதவர்களை போன்றும், தமிழக தலைநகர் சென்னையிலிருந்து செம்மரங்களை கடத்துவது போன்றும் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஏராளமான விஷயங்களை தமிழர்களை சீண்டுவதை போல அமைந்துள்ளது.
Recommended Video
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த சில தினங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது இரு பாகங்களாக வெளியிட முடிவு செய்து நேற்றைய தினம் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் தியேட்டர்களில் வெளியானது.
இந்த படத்தில் செம்மரங்களை கடத்தும் லாரியின் ஓட்டுநராக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அவர் செம்மரங்களை கடத்தி கொண்டு வரும் போது தமிழக எல்லையில் தமிழக போலீஸாரிடம் பிடிபடுவார்.

அல்லு அர்ஜுன்
அப்போது ரூ 10 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக அல்லு அர்ஜுன் பேரம் பேசுவார். ஆனால் தமிழக போலீஸார் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பின்னர் 20 ஆயிரம், 50 ஆயிரம் , ஒரு லட்சம் என பேரத்தை அதிகரிப்பார். அப்போதும் போலீஸார் மசிய மாட்டார்கள். இதையடுத்து அல்லு அர்ஜுனை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்வார்கள்.

பணத்தை வாங்கிக் கொண்டு
அப்போது அல்லு அர்ஜுன் தலைக்கு ஒரு லட்சம் தருவதாக கூறிய போது உடனே பணத்தை வாங்கி கொண்டு தமிழக போலீஸார் அவரை விட்டுவிடும் படியாக காட்சிகள் வரும். அது போல் பணத்தை பெற்ற தமிழக போலீஸார் நீங்கள் தமிழரா என கேட்க , அதற்கு புஷ்பா (அல்லு அர்ஜுன்) நான் பச்சை தெலுங்கன் என சொல்வார்.

அதிகாரி
அது போல் செம்மரங்கள் கிடைக்கும் ஆந்திர மாநிலம் சேஷாசல வனப்பகுதியில் மரங்களை வெட்டும் போது ஆந்திர போலீஸார் அங்கு வருவதும் அவரை கைது செய்ய தொடர்ந்து முயற்சிப்பதும், அதிலிருந்து அல்லு தப்புவதுமாக காட்சிகள் உள்ளன. எனினும் தொடர்ந்து அந்த அதிகாரி அல்லுவை கைது செய்ய முயற்சிப்பார்.

தமிழக போலீஸார்
இந்த காட்சிகள் சர்ச்சைக்குரியதாகியுள்ளன. ஏதோ தமிழக போலீஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறுகளை தட்டி கேட்காதவர்கள் போலும், ஆந்திர போலீஸார் நேர்மையானவர்கள் போலும் காட்சிகள் நகர்ந்துள்ளன. அது போல் சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை கடத்தி , அதை விற்பதற்கு சென்னையில் முருகன் என்ற ஒரு கேங்ஸ்டர் இருப்பது போலும் காட்டியுள்ளார்கள்.

சேஷாசல வனப்பகுதி
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவது தமிழர்கள்தான் என்பது போல் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்துள்ளார்கள். அதிலும் கடத்தப்படும் செம்மரங்கள் சென்னைக்கு மட்டும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகள் கடத்துவதாகவும் வசனங்களை வைத்துள்ளார்கள்.

ஆந்திர மாநிலம்
2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் குற்றவாளி என கூறி 20 பேரை போலீஸார் சுட்டு கொன்றனர். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களை மூளைச் சலவை செய்து கூலி வேலை என்று மட்டும் சொல்லி அழைத்து செல்லும் இடைத்தரகர்கள், அவர்களை செம்மரங்களை வெட்டும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க தமிழர்கள்தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications