பொன்முடிக்கு தான் எனது மகளை கொடுப்பேன்! விடாப்பிடியாக விசாலாட்சியை திருமணம் செய்து வைத்த தாய்மாமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியோடு சேர்த்து அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தம்பதி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொன்முடி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று 1972ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியராக வேலையில் சேர்ந்தவுடன் அவரது தாய்மாமா, தனது மகள் விசாலாட்சியை அக்கா மகன் பொன்முடிக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என விடாப்பிடியாக இருந்திருக்கிறார். பொன்முடியோ பகுத்தறிவாளராக தன்னை அடையாளப்படுத்தி பகுத்தறிவு மேடைகளில் பேசி வந்தவர். ஆனால் அவரது தாய்மாமாவோ ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்.

Along with Ponmudi and his wife Visalakshi have been sentenced to 3 years in prison, meanwhile an interesting information about the couple

இதனாலேயே தாய்மாமா மகளான விசாலாட்சியை திருமணம் செய்துகொள்ள பொன்முடி ஆரம்பத்தில் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனாலும் அவரது மாமா விடுவதாக இல்லை. அக்கா மகனுக்காக சுயமரியாதை திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு தனது மகள் விசாலாட்சியை பொன்முடிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்திருந்த விசாலாட்சியை திருமணம் செய்த பிறகு பொன்முடி தான் தொலை தூரக் கல்வி மூலம் படிக்க வைத்தார். அதுமட்டுமல்ல வாரத்தில் ஒரு நாள் நேரடி செமினார் வகுப்பும் மனைவிக்கு நடத்தியிருக்கிறார்.

இதெல்லாம் 1970களில் நடந்தது. 90களுக்கு பிறகு செலவுக்கே பொன்முடி தனது மனைவியிடம் பணம் வாங்கும் அளவுக்கு மொத்த நிர்வாகத்தையும் விசாலாட்சி தான் கவனிக்க ஆரம்பித்தார். அதேபோல் 1989ஆம் ஆண்டு திமுகவில் பொன்முடிக்கு சீட் உறுதியான நிலையில் அரசு வேலையை ராஜினாமா செய்த போது, தேர்தலிலேயே போட்டியிட வேண்டாம் என அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் விசாலாட்சி. அன்றே மனைவி பேச்சை கேட்டிருந்தால் இன்று இத்தகைய ஒரு சூழல் பொன்முடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி கொஞ்சம் கோபக்காரர் என்பதால் அவருடன் வார்த்தைக்கு வார்த்தை போட்டியாக பேசுவதை தவிர்த்து எப்போதும் விட்டுக்கொடுத்து சென்றிருக்கிறார் விசாலாட்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+