Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஞ்சித்துக்கு ஆளூர் ஷாநவாஸ் தரமான பதில்! விசிக கூட்டணியை உடைக்க சதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்கச் சிலர் முயன்று வருவதாக ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்திருக்கிறார். அவர் இதன் மூலம் மறைமுகமாக இயக்குநர் ரஞ்சித்திற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தலித் மாதமாகக் கொண்டாடி வருகிறார் இயக்குநர் ரஞ்சித். அப்போது 'வானம் கலைத் திருவிழா'வும் நடத்தப்பட்டு வருகிறது.

Aloor Shahnavaz response to Ranjith controversy speech

இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இயக்குநர் ரஞ்சித் பேசிய பேச்சைப் பலரும் விசிகவுடன் இணைத்து வைத்துப் புரிந்துகொண்டு வருகின்றனர். தலித் அமைப்புகள் தனித்து இயங்க வேண்டும் என்றார் அவர். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் பேசிய ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது.

அதில் அவர், "தலித்துகளின் போராட்டமே தங்களை மைய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காகத்தான். தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. அம்பேத்கர் கூட பொது இடத்தில் நீர் எடுப்பதற்காக உரிமையைக் கேட்டுத்தான் போராடினார். ஆக, தலித் விடுதலை என்பதே பொதுச் சமூகத்துடன் கலப்பதுதான்' என்று விளக்கி இருந்தார்.

இதைவைத்து விசிக தொண்டர்களும் ரஞ்சித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை குறித்தும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மிகத் தெளிவாக விசிகவின் நிலைப்பாட்டை விவரித்திருக்கிறார். படிப்படியாக விசிக எப்படி வளர்ந்து வந்துள்ளது என்பதை அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.

Aloor Shahnavaz response to Ranjith controversy speech

இந்தச் சர்ச்சையை ஒட்டி ஆளூர் ஷாநவாஸ், "அரசியலில் நாங்கள் தனித்தன்மையோடுதான் இயங்கி வருகிறோம். எங்களின் தனித்தன்மை என்ன கெட்டுப் போய்விட்டது? எங்கள் தலைவர் திருமாவின் செயல்பாட்டில் என்ன குறையை நீங்கள் கண்டுவிட முடியும்?

நாங்கள் தனித்தன்மையோடு இருப்பதற்காகத்தான் தனிச் சின்னத்தில் நிற்கிறோம். அதற்காகப் போராடுகிறோம்.

தனித்துவத்தைக் கைவிட்டவர்கள்தான் அரசியல் களத்தில் காணாமல் போய் உள்ளனர். எங்கள் தலைவர் திருமாவளவன் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் அரசியலுக்கு வந்த பலர் இன்று காணாமல் போய்விட்டனர். பல அம்பேத்கரிஸ்ட்டுகள் காணாமல் போய் இருக்கிறார்களே?

நாங்கள் அத்தனை தடைகளையும் மீறி எழுந்து நிற்கிறோமே? பல மாநிலங்களில் கட்சிக் கிளை பரப்பி, வேர்விட்டு எழுந்து நிற்கிறதே? இந்தியா கூட்டணியில் அம்பேத்கரிஸ்ட் என்று சொல்லக் கூடிய முகமாக திருமாவளவன் தானே இருக்கிறார்?

ராம்விலாஸ் பஸ்வான் கட்சியா இருக்கிறது? மாயாவதியா இருக்கிறார்? ராம்தாஸ் அத்வாலே கட்சியா இருக்கிறது? தமிழ்நாட்டில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியா இருக்கிறார்? இந்தியக் குடியரசுக் கட்சியின் செ கு தமிழரசனா இருக்கிறார்? புரட்சி பாரதமா இருக்கிறது?

Aloor Shahnavaz response to Ranjith controversy speech

எந்தக் கட்சி உள்ளது? எங்களின் ஒரே கட்சி விசிக தானே இருக்கிறது? அந்தக் கட்சிகள் எல்லாம் எங்கே போயின? இன்றைக்கு நாட்டில் ஒரு மாற்று அரசியலை மாற்றத்தை முன்வைக்கின்ற இடத்தில் முன்னணி முகமாக விசிகதான் நிற்கிறது.

எங்களை யாரும் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடக் கூடாது என்று தடுத்தார்களா? அல்லது 40 தொகுதிகளில் எங்களை நிற்கக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா?

எங்கள் வலிமையை அறிந்து, மாற்றுக் கட்சியின் வலிமையை அறிந்து நாங்கள்தான் ஒரு முடிவை எடுக்கின்றோம். யாரும் எங்களைத் தடுக்கவில்லை. யார் தடுக்க முடியும்?

சீமான் 40 தொகுதிகளில் நிற்கிறார். பிரச்சாரம் செய்கிறார். அவரை யாராவது தடுத்தார்களா? விசிக தேர்தல் களத்தில் முதன்முதலாகப் போட்டியிட்டதே தனித்துத்தான். யாருடைய கூட்டணியிலும் அப்போது விசிக இல்லை. 2 லட்சத்துக்கு மேல் ஓட்டுக்களை வாங்கினார் எங்கள் தலைவர்.

2004இல் கூட அதிமுக திமுக இல்லாமல் தனித்துத்தான் விசிக நின்றது. 2 லட்சத்து 55 ஆயிரம் ஓட்டுகளை வாங்கிக் காட்டினார். எம்பி ஆவதற்கு அந்த வாக்குகள் போதாது. மீது உள்ள இரண்டரை லட்சம் வாக்குகளை எங்கிருந்து எடுப்பீர்கள்? அப்படித்தானே எம்பி ஆக முடியும்?

அதற்காகத்தான் கூட்டணி அமைக்கிறோம். கூட்டணி அமைத்தாலும் எங்கள் கொள்கையைத்தான் நாங்கள் பேசுகிறோம்.

தருமபுரியில் நடந்த சாதிய பிரச்சினையை வைத்து ராமதாஸ் அரசியல் செய்யப் பார்த்தார். ஊர் ஊராகப் போய் சாதி சங்கங்களைத் திரட்டினார். குறிப்பாக அவரது நடவடிக்கை தலித் சமூகத்தைத் தனிமைப்படுத்தும் நோக்கிலிருந்தது.

Aloor Shahnavaz response to Ranjith controversy speech

ஆனால், அப்போது அவரை யாரும் அங்கீகரிக்கவில்லையே. விசிகவின் குரல்தான் எடுபட்டது. நாங்கள் ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்தோம். ஒரு உரையாடலை வளர்த்து எடுத்தோம். அன்றைக்குத் திமுக தலைவர் கருணாநிதி குழுவை அனுப்பினார். அவர் பயப்படவில்லையே?

அதன் பின்னால் விசிக வளர்ந்து வந்துள்ளது. 2019இல் இரண்டு எம்பி. 2021இல் 4 எம்.எல்.ஏக்களை பெற்றோம். இப்போது 2024 தனிச் சின்னத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளோம்.

உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் பிரதிநிதிகள் அதிகம் வென்றுள்ளார்கள். துணை மேயர்கள் இருக்கிறார்கள். படிப்படியாக விசிக வளர்ந்துள்ளதே? பாமகவின் நிலை என்ன? அவர்கள் எவ்வளவு வளர்ந்துள்ளார்கள்?

நாங்கள் தனித்துவமாக இருந்ததால்தான் இத்தனை வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

திமுகவுக்குள் பாமகவுக்காகப் பேசுவதற்காக ஆட்சிகள் இருக்கிறார்கள். அதை எல்லாம் தாண்டி நாங்கள் விசிகவுடன்தான் இருப்போம் என்று உறுதியோடு நின்றுள்ளது இல்லையா? நாங்கள் ஒத்த கருத்தோடு பயணிப்பது சிலருக்குப் பொறுக்கவில்லை.

எப்படியாவது திமுகவிலிருந்து விசிகவை பிரித்துவிட வேண்டும். அதைப்போல விசிகவிடம் இருந்து திமுகவைப் பிரிக்க வேண்டும். இதற்காகப் பல தரப்புகளில் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.

இது சிலரின் கனவாக இருக்கிறது. அதைத் தாண்டிதான் நாங்கள் களத்தில் நிற்கிறோம். திமுக தவறு செய்தால் முதல் ஆளாகச் சுட்டிக் காட்டுகிறோம். எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கிறோம். 12 மணிநேரம் வேலைச்சட்டம் வந்த போது முதல் ஆளாக எதிர்த்தவர் நாங்கள். சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்கள்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+