திடீரென்று உயர்ந்த 1 கோடி ஓட்டுக்கள்? 4 லட்சம் புகார்கள்? சாட்டையை சுழற்றிய ஷாநவாஸ்
சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப்பதிவு பற்றிய புள்ளிவிவரங்களில் திடீரென்று 1 கோடி வாக்குகள் அதிகரித்துள்ளது தொடர்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளார்.
இதுவரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்று முடிந்த 4 கட்டத் தேர்தல்களில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை அறிவிப்பதில் தேர்தல் ஆணையத்திடம் குழப்பங்கள் உள்ளன. முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட ஃபார்ம் 17சி வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் ஏன் தாமதிக்கிறது? என்று சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், 7 நாள்களுக்கு முறையான புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் கொடுத்துள்ளார். எப்படி வாக்குச் சதவீதம் கூடியது என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தல் போதும் ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் புகார்கள் குவியும். இந்த முறை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையத்தின் மீதே புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் சர்ச்சையில் சிக்கித் தவிப்பது ஏன்? அது பற்றி ஆளூர் ஷாநவாஸ் காரசாரமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், "கடந்த 7 ஆம் தேதியே எங்களின் தலைவர் திருமாவளவன் ஒரு விரிவான கடிதத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதி இருக்கிறார்.
அதில் கடந்த தேர்தல்கள் முடிவடைந்தவுடனேயே, பதிவான வாக்குகள் எவ்வளவு? வேட்பாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெளியிடுவீர்கள், ஆனால் இந்த முறை ஏன் தாமதம் செய்யப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இவ்வளவு சர்ச்சைகள் எழுந்த பிற்பாடுதான் இப்போது தேர்தல் ஆணையம் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் முன்பு சொன்ன எண்ணிக்கைக்கும் இப்போது சொல்லப்பட்ட எண்ணிக்கைக்கும் சுமார் 1 கோடி வாக்குகள் வித்தியாசம் வருகிறது?

குறைந்த வாக்குகள் வித்தியாசம் இருந்தால் பாஜக வெற்றி பெறும் என்று உள்ள தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ளது. அதிக வாக்குகள் இருந்தால் மட்டுமே பாஜக வெற்றி சாத்தியம் என்று கணிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு எக்கச்சக்கமாக திடீரென்று உயர்ந்துள்ளது. இது எப்படி நடந்தது?
ஆக, கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையைக் கூட இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் 1 கோடி வாக்குகள் வித்தியாசம் உள்ளது என்று காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளும் கேள்வி கேட்டுள்ளனர். சந்தேகப்பட்டுள்ளனர்.
ஆனால், பாஜகவுக்கு இது பற்றி சந்தேகமே எழவில்லை. கேள்வி கூட எழுப்பவில்லை. ஆகவேதான் சொல்கிறோம், பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்கிறோம்.

இது தொடர்பாக விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது. தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்கிறது. அதற்கு நீதிபதி சந்திரசூட், 'எதற்கு அவகாசம் வேண்டும்?' என்று கேள்வி கேட்கிறார்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 15 லட்சம் வாக்குகள் உள்ளன. அப்படி என்றால் 20 ஆயிரம் பூத்துகள் உள்ளன. ஒரு பூத்துக்கு 1 ஏஜெண்ட் போட்டால் 2 ஆயிரம் ஏஜெண்டுக்கள் தேவை. ஒரு சுயேச்சை வேட்பாளரால் 2 ஆயிரம் ஏஜெண்ட் போட முடியுமா?
ஆளும் கட்சிக்கு ஆட்கள் இருப்பார்கள். எதிர்க்கட்சிக்கு ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் தேர்தல் முடிந்ததும் ஒரு வாக்குச்சாவடியில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் அந்தச் சுயேச்சை எப்படி அறிந்துகொள்வார்? அவருக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? தேர்தல் ஆணையம் தான் அதைச் செய்ய வேண்டும்? அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி.
இதேதான் எஸ்பிஐ தேர்தல் பத்திர வழக்கில் நடந்தது. தேர்தல் நிதியைப் பெற்ற கட்சிகளின் பெயரை வெளியிடுவதில் தாமதிக்க முயன்றது எஸ்பிஐ. அதை உடைத்து நீதிமன்றம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்போது அதையே தேர்தல் ஆணையம் செய்கிறது.

பாஜக முன்பே எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியது. எம்பிகளை விலைக்கு வாங்கியது. இப்போது வேட்பாளர்களையே விலைக்கு வாங்கி வருவதைப் பார்க்கிறோம். அடுத்து பூத் ஏஜெண்டுகளை விலைக்கு வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? அதனால்தான் பிரசாந்த் பூஷன், 'பூத் ஏஜெண்டுகள் கவனமாக இருக்க வேண்டும்' என்கிறார்.
ஒரு பையன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து 8 ஓட்டுக்கள் போட்டுள்ளான். அதில் ஒரு கொடுமை என்னவென்றால், அந்தப் பையனுக்கு ஓட்டே இல்லை. அந்தச் சிறுவனுக்கு 16 வயது ஆகிறது.
இப்படி ஒரு சிறுவன் முறைகேடாக எப்படி உள்ளே வந்தான். எப்படி 8 முறை ஓட்டுப் போட்டான். சிசிடிவி பதிவுகளை வைத்து இதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது? அதைச் செய்ததா?
அந்தச் சிறுவன் கள்ள ஓட்டுப்போட்டதை யார் வெளியிட்டார்கள்? அந்தச் சிறுவனே வீடியோ போட்டுத் தெரிவித்தான். அதன்பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் சிசிடி எதற்கு? தேர்தல் அதிகாரி எதற்கு?
அப்படி என்றால் இதே மாதிரியான மோசடிகள் எத்தனை பூத்துகளில் நடந்துள்ளதோ? எவ்வளவு கள்ள ஓட்டுக்கள் பாஜகவுக்கு போடப்பட்டுள்ளதோ? இதை எல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்கக் கூடாதா?
இந்தத் தேர்தலில்தான் 4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் வரலாற்றிலேயே இந்தளவுக்கு வழக்குகள் பதிவானது இல்லை. ஆனால், இந்த முறை நடந்துள்ளது" என்கிறார்
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications