"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான்! நான் பாலியல் தொழிலாளியா, என் சாபம் உன்னை சும்மா விடாது என பாலியல் புகார் கொடுத்துள்ள பெங்களூர் நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார்.

seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது குறித்து நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் (கனிமொழி) யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா?

நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்?

என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள். Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.

அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடந்தது என்ன: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் 376 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது, என்ன மாதிரியான கண்டனங்களை தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+