டிடிஎஃப் வாசனுக்கு டஃப் கொடுக்கும் அமலா ஷாஜி! 2K KIDS ட்ரீம் கேர்ளாம்! உண்மையில் 90s கிட்ஸ் பாவம்யா!
சென்னை : டிடிஎஃப் வாசனுக்கு வந்த கூட்டத்தை பார்த்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் பாராட்டுகளும் கண்டனங்களும் எழுந்து வரும் நிலையில் இது என்ன பிரமாதம் எங்கள் இன்ஸ்டா ரீல்ஸ் குயின் அமலா ஷாஜி தெரியுமா? என களத்தில் இறங்கி அடித்துப் பேசி வருகின்றனர் 2 கே கிட்ஸ்கள்.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது டிடிஎஃப் வாசன் குறித்த விவாதங்கள். கோவையில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த அவர் யூடியூபில் பிரபலமாக தொடங்கிய நிலையில் தற்போது சுமார் 26 லட்சம் பேர் அவரைப் பின் தொடர்கின்றனர்.
சென்னை, கோவை ஏன் லடாக் வரை சென்றால் கூட ஆயிரக்கணக்கில் அவரை பார்க்கச் சூழும் ரசிகர்களும், பைக் சாகசங்களுக்காக அவரை பின்தொடரும் 2கே கிட்ஸ்கள் என பலரது கதாநாயகனாகவே இருக்கிறார் வாசன்.

டிடிஎஃப் வாசன் சர்ச்சை
இந்நிலையில் தனது பிறந்த நாளுக்காக சிறிய அளவில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த டிடிஎஃப் வாசனை காண கோவையில் ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் சூழ்ந்தனர். ஒரு புகழ்பெற்ற கதாநாயகனுக்கு வரும் ரசிகர்களை விட அதிக எண்ணிக்கையில் அவரை காண இளைஞர்கள் குவிந்திருந்தனர். குறிப்பாக 16 வயது முதல் 25 வயது உட்பட்ட 2கே கிட்ஸ்கள் தான் அதிகம் இருந்தனர். மின்னல் வேக பைக் பயணம், சாகசங்கள் , போக்குவரத்து விதிமுறை மீறல்கள் என சாகசம் என்ற பெயரில் விஷ விளையாட்டை இளைஞர்களிடம் வாசன் கொண்டு சேர்ப்பதாக புகார் இருந்தாலும் அவரை தங்கள் கதாநாயகன் மற்றும் குருவாகவே கருதுகின்றனர் சில இளைஞர்கள்.

அமலா ஷாஜி தெரியுமா?
அவரைப் பார்த்து சாகசங்கள் செய்து தங்களையும் பிறரையும் சிக்கல்களில் ஆழ்த்திவிடும் அபாயம் உண்டு. இதனை தற்போது கண்டிக்க வேண்டும் என குரல்கள் எழுந்திருந்தாலும் அவ்வாறு அறிவுரை கூறும் மூத்தவர்களை பூமர் அங்கில் என கலாய்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். பப்ஜி மதன், டிடிஎஃப் வாசல் உள்ளிட்டோர்களை 1990க்கு பிறந்த பிறகு பிறந்த பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது. ஆனால் இரண்டாயிரத்திற்கு பிறகு பிறந்த அனைவருக்குமே இவர்களை நன்றாக தெரிகிறது அந்த வகையில் இவர்கள் இருவரையும் விட தூக்க ஹிட்ஸ் விரும்புவது அமலா ஷாஜி.

இன்ஸ்டா ரீல்ஸ்
அமலா ஷாஜியா யார் என கேட்கிறீர்களா பலருக்கு இன்று வரை தெரியாது. சமூக வலைதள பக்கங்களில் உலாவும் போது தான் அமலா ஷாஜி என்ற ஒருவரே இருப்பது தெரியும். பிறகு அவரைப் பற்றி தேடிய போதுதான் இன்ஸ்டாகிராமில் வளம் வரும் அவரை லட்சக்கணக்கானோர் பாலோ செய்வதும் ரில்கள் மூலம் கோடிக்கணக்கான இதயங்களில் அவர் இடம்பெற்று இருப்பதும் தெரியவந்தது. இதனுடைய தான் தற்போது சமூக வலைதளங்களில் டிடிஎஃப் வாசனா அமலா ஷாஜியா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

மிகவும் பிரபலம்
சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா மேனன், அதுல்யா ரவி நடிகைகளுக்கு 2கே கிட்ஸ்களின் ஆதரவோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார் அவர்தான் அமலா ஷாஜி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் களமிறங்கினார்.

பாஃலோயர்கள் அதிகம்
ஆபாச நடனம் அல்லாமல் கொஞ்சமாக கவர்ச்சி காதல் என வீடியோக்களை போட ஆரம்பித்தவர் தற்போது ட்ரெண்டிங்கில் எப்போதுமே நம்பர் ஒன் தான். சமையல் டிப்ஸ் முதல் க்யூட் வீடியோக்கள் என அடுத்தடுத்து பதிவிட்டு பிரபலமான அவரை கொண்டாடி வருகின்றனர் 2 கே கிட்ஸ்கள். "அழுக ஒன்னும் வேணாம் ஓகே" என்ற வசனத்தோடு அவர் வெளியிடும் வீடியோக்களை கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் கிடைத்த புகழால் தற்போது துணிக்கடை விளம்பரம் பியூட்டி பார்லர் விளம்பரம் என கலக்கி வருகிறார். சொல்லப் போனால் நம்மைச் சுற்றி இருக்கும் நூற்றி பத்து பேர் அமலா ஷாஜியின் ரசிகர்களாக இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications