Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணைஞ்சு போன நெருப்போட விளையாட எங்களுக்கும் பிடிக்காதுண்ணே.. முதல்ல எரியுங்கள்.. அமர்பிரசாத் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அணைந்து போன நெருப்போட விளையாடுவது எங்களுக்கும் பிடிக்காது அண்ணே! என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முற்றல் அதிகரித்து வருகிறது. இதனால் இவர்களுக்குள் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமையுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. அதிமுகவை பாஜக நிர்வாகிகள் அவ்வப்போது சீண்டி வருகிறார்கள்.

Amar Prasad Reddy teases Ex Minister Jayakumar

திமுக சொத்து மதிப்பை அண்ணாமலை வெளியிட்ட போது இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் சொத்து மதிப்பும் வெளியிடப்படும் என்றார். அப்படியென்றால் அதிமுகவின் சொத்து மதிப்பும் வெளியிடப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலில் அண்ணாமலை அதிமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடட்டும், பிறகு அதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என்றார். அது போல் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அண்ணாமலை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். அவரை பெரிய ஆளாக்காதீர்கள் என தெரிவித்தார்.

இவ்வாறு இரு தரப்பினருக்கும் நெருப்பு ஒன்று புகைந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் தீரன் சின்னமலையின் 267 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாயில் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர். நாங்கள் தெளிந்த நீரோடையாகவும் சிறந்த புத்தகமாகவும் இருக்கிறோம்.

எங்கள் அனைவருடைய சொத்து பட்டியலும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும். தேவையில்லாமல் எங்களை யாரும் டச் செய்ய வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு செய்ய முடியாது. மத்திய குழுதான் முடிவு செய்யும்.

Amar Prasad Reddy teases Ex Minister Jayakumar

எங்களிடம் கூடுதல் சொத்து இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். எந்த பயமும் இல்லை. எங்களை டச் செய்து நெருப்போடு விளையாடாதீர்கள். தைரியமாக சொல்கிறேன். உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார். அண்ணாமலையை எச்சரிக்கும் விதத்தில் ஜெயக்குமார் பேசியிருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமார் பேசியதை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் எங்களை தேவையில்லாமல் டச் பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமாரம சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே... முதல்ல நீங்கள் எரியும் நெருப்பாகிட்டு அப்பறம் வாங்க.. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசித்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+