Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ அம்பாசமுத்திரம்.. போலாம் ரைட்.. அமர் பிரசாத் ரெட்டியை அரசு பஸ்சில் ஏற்றி இறக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவருக்கு மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா? அல்லது ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அண்ணாமலையின் வீட்டின் முன்பாக நடப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது, மாநகராட்சியின் பொக்லைன் இயந்திரத்தை சேதப்படுத்தியதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 Amar Prasad Reddy was picked up by the police in the government bus Chennai to Ambasamudram

அமர்பிரசாத் ரெட்டியின் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்ந்தன. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும் நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை மேற்கொண்ட "என் மண், என் மக்கள்" பாதயாத்திரையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமர்பிரசாத் ரெட்டி மீது ஆழ்வார்குறிச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் நாளை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதற்காக இன்று புழல் சிறையில் இருந்து அமர் பிரசாத் ரெட்டியை ஆயுதப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லாமல் போலீசார் அரசு பேருந்தில் அழைத்து சென்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து போலீசார் அமர்பிரசாத் ரெட்டியை தென்காசி வரை அரசு பேருந்துலேயே அழைத்து சென்றனர்.

சென்னையில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அமர்பிரசாத் ரெட்டியின் நீதிமன்ற காவல் நிறைவடைவதை முன்னிட்டு அவர் மீண்டும் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+