Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துள்ளி மகிழும் தாம்பரம்.. சென்னையில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் கவனிச்சீங்களா? சபாஷ் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு வீட்டு மனை பட்டாவையும் வழங்கினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இயங்கி வரும், அரசு தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக, 2021 அக்டோபரில் அரசு அனுமதி அளித்திருந்தது.. இந்த மருத்துவமனை மேம்பாடுக்காக, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

chennai tambaram Government Hospital

இதற்காக தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு, கடந்த 2023ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுமே, கட்டுமான பணிகள் துரிதமாக ஆரம்பமாகின.. இப்பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், மருத்துவமனை கட்டிடம் திறப்புக்கு தயாராகிவிட்டது.

விறுவிறு கட்டிட பணிகள்

இந்த கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே ஆய்வு செய்திருந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்..

குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, புதிய மருத்துவமனை தற்போது கட்டப்பட்டு உள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை

இந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பில் புதிதாக பல் மருத்துவமனை மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது..

மருத்துவமனை, 400 படுக்கை வசதி, ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. சி.டி.,ஸ்கேன், குழந்தைகள் நலன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு, நீரிழிவு பிரிவு ஆகிய சிறப்பு வசதிகள் அமைய உள்ளன. முறையாக அனைத்து அனுமதிகளையும் பெற்றே இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

தாம்பரம் மருத்துவமனை

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 213 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த தாம்பரம் தாலுகா மருத்துவமனை, இப்போது 400 படுக்கைகளுடன் கூடிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

6 தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 6 அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.இங்கு புறநோயாளிகள் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே, ஃப்ளோரோஸ்கோபி, அவசரகால அறுவை சிகிச்சை மையம், ரத்த வங்கி, டயாலிசிஸ் வார்டு, மகப்பேறு கட்டடம் ஆகியவையும் உள்ளன. மேலும் இந்த மருத்துவமனைக்கு அருகில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தனிமைப்படுத்துதல் கட்டடமும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார். பின்னர், பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு சென்று 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம்" "கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள் காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி 2021 முதல் தற்போது வரை சுமார் 17லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+