வியப்பின் விளிம்பு..ரூ.1000 உரிமைத்தொகை டூ விடியல் பயணம்.. பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளியது யார் பாருங்க
சென்னை: வியப்பின் விளிம்பில் நம்மை தள்ளும் தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். "எல்லோருக்கும் எல்லாம்" என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இன்றைய தினம் கிட்டத்தட்ட 2.07 மணி நேரம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

முக்கிய அம்சம்: அப்போது, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் தன்னுடைய உரையில் அறிவித்தார். எம்பி தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு, குறு தொழில்கள், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்ஜெட்டுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.. வியப்பின் விளிம்பில் நம்மை தள்ளும் தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் இதுதான்:
இயக்க கோட்பாடு: "எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட இயக்கக் கோட்பாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும் வரவு -செலவு திட்டம்!. மாபெரும் தமிழ் கனவுடன் தமிழ்நாடு அரசின் 2024- 25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார்.
சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இயற்கைப் பேரிடர், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி நெருக்கடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒன்றிய அரசின் கடும் நிபந்தனைகள், ஜிஎஸ்டி வரி வருவாயில் ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு, வருவாய் பற்றாக்குறை ரூபாய் 44 ஆயிரத்து 907 கோடி அளவுக்கு உயர்வு, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 94060 கோடியாக அதிகரிப்பு போன்ற கடுமையான சூழ்நிலையிலும் திறன் மிக்க நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டி வாழ்த்துகிறேன்.
கலைஞர் கனவு திட்டம்: தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர் நலன் பேணப்படும் என்பதும் பாராட்டத்தக்கது. குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் போல் இந்த நிதிநிலை அறிக்கையிலும் கல்வி வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 8212 கோடி, பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பூங்கா: கோவை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், மதுரை, விருதுநகர், மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்ங்களில், விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிப்காட் தொழில் பூங்கா, செலவில் ஜவுளி பூங்காக்கள் போன்றவை அமைத்தல், இவைகள் மூலம் வேலைவாய்ப்புகள், ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு; 2025 ஜனவரியில் உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமான "விடியல் பயணம்" திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
மகளிர் உரிமைத்தொகை: மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 13 ஆயிரத்து 720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; வரும் நிதியாண்டில் பத்தாயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்; சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; கோவை, மதுரையில் மூன்று புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்; ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் போன்ற பயன் தரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
"தடைகளை தாண்டி -வளர்ச்சியை நோக்கி" எனும் 2024-25 நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,"எல்லோருக்கும் எல்லாம்" என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது" என்று வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications