அரண்ட அம்பத்தூர்.. புதுஸா வரப்போதாமே.. ஜம்ஜம்முன்னு நடக்கும் ஜரூர் பணி.. நிம்மதியில் சென்னைவாசிகள்
சென்னை: அம்பத்தூர் பகுதியில் புதிய மேம்பாலம் வரப்போகிறது.. இதுகுறித்த புதுதகவலை கேள்விப்பட்டு, அப்பகுதியின் குடியிருப்புவாசிகள் நம்பிக்கையும், நிம்மதியும் அடைந்துள்ளனர். என்ன காரணம்?
அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது... இந்த மேம்பாலத்தைதான், பல வருடங்களாக அம்மக்கள் பயன்படுத்தி வந்தனர்..
ஆனால், 4 வருடங்களுக்குமுன்பு, அந்த நடை மேம்பாலத்தில் பழுதுஏற்படவும், இதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.. அதன்படி, கடந்த 2020-ம் வருடம் முதல், அந்த நடைமேம்பாலத்தை மக்களால் பயன்படுத்த முடிவதில்லை..
நடைமேம்பாலம்: இதனால், அம்பத்தூரில் புதிதாக ரயில்வே சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன.. இதையடுத்து, அந்த நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்... அதன்படி சில நாட்களுக்கு முன்பு அந்த நடைமேம்பாலம் இடித்தும் அகற்றப்பட்டது.

அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்டவும் ரயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. இதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு பணி நடந்து முடிந்து, 7.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. ரயில்வே கிராசிங் பகுதியில் 12 அடி அகலத்தில் இந்த சுரங்கப்பாதை கட்டப்படுகிறது..
அம்பத்தூர்: அதன்படி புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப்பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... அதாவது, பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை 5 அடியில் அமைக்கப்படுகிறதாம்.. இதற்காக, அம்பத்தூர் ரயில் நிலையத்தின் 2 பக்கமும், மார்க்கெட் பகுதியை இணைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதைத்தவிர, அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில், டூவீலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..
சுரங்கப்பாதை: ஆனாலும், அம்பத்தூர் பகுதி மக்களுக்கு இது மகிழ்ச்சியை தரவில்லையாம்.. காரணம், இந்த சுரங்கப்பாதை குறுகலாக இருக்கும் என்கிறார்கள்..
டூவீலர்கள், 4 சக்கர வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.. குறைந்தது 15 அடியாவது வேண்டும்.. இந்த அளவுக்கு அகலமாக இல்லாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு, சுரங்கப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்கிறார்கள்.. அத்துடன், இந்த திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னால் பொதுமக்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை குரல்கள் குடியிருப்புவாசிகளிடமிருந்து எழுந்துள்ளன.
நம்பிக்கை: இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு தான் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.. அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் இந்த பணி நிறைவடையும்.. திட்டம் முழுமையடைவதற்கு முன்பு, குடியிருப்புவாசிகளின் கருத்துகளும் பெறப்படும்.. அதன்படி, பரிசீலித்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அம்பத்தூர்வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு












Click it and Unblock the Notifications