"Go Back Amit Shah": டிச.27-ல் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் தமிழக காங்கிரஸ்!
சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27-ந் தேதி தமிழ்நாடு வருகை தரும் போது கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை விமர்சித்ததால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தமது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: "வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம். இவ்வாறு செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை
மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார் என்கின்றன தகவல்கள். மறைந்த தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் டிசம்பர் 28-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேமுதிக இதனை குருபூஜையாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டிசம்பர் 27-ந் தேதி சென்னை வரும் அமித்ஷா, விஜயகாந்த் நினைவு தின நிகழ்ச்சியில் மட்டுமல்லாது திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்யவும் இருக்கிறாராம். அதேபோல தமிழ்நாட்டில் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகங்களையும் அமித்ஷா திறந்து வைக்க இருக்கிறாராம்.
அமித்ஷா பேசியதுதான் என்ன?
அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது, அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது.. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கம் கிடைக்கும் என பேசியிருந்தார் அமித்ஷா.
அமித்ஷா பேச்சுக்ககு எதிர்வினை என்ன?
அமித்ஷாவின் அண்ணல் அம்பேத்கர் பேச்சுக்கு எதிராக இன்று வரை நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் உக்கிரப் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் போட்டி போராட்டம் நடத்த அது பெரும் மோதலாக முடிவடைந்தது. இந்த மோதலில் பாஜக எம்பிக்கள் மண்டைகள் உடைந்தன.
தமிழ்நாடு கொந்தளிப்பு காங்கிரஸ் போராட்டமும்
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு போராட்டங்களை நடத்தியது. காங்கிரஸ் கட்சியும் ஒருநாள் போராட்டம் நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று வரை தொடர் போராட்டம் நடத்தி அமித்ஷாவின் உருவபொம்மைகளை எரித்தும் வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக Go Back Amit Shah கோஷத்துடன் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த உள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications