இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியை குடோனில் தூங்க வைத்த தொழிலதிபர்!
சென்னை: இன்ஃபோசிஸ் நிறுவனரும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாருமான நாராயணமூர்த்தியை, அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் காற்றோட்டமில்லாத குடோனில் தூங்க வைத்த நிகழ்வு பயோகிராபி புத்தகம் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குறித்த வாழ்க்கை வரலாற்று நூலை அமெரிக்க வாழ் இந்திய எழுத்தாளரான, சித்ரா பானர்ஜி திவாகாருணி என்பவர் எழுதியுள்ளார். அதில் இன்போசிஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நாராயணமூர்த்தி எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மன்ஹட்டன் நகரை சேர்ந்த டான் லில்ஸ் என்ற தொழிலதிபர் வாடிக்கையாளராக இருந்த நிலையில், அவரை தொழில் நிமித்தமாக சந்திப்பதற்கு அமெரிக்க சென்ற நாராயணமூர்த்தியை விடுதி அறையில் தங்க வைப்பதற்கு பதில் தனது குடோனில் தங்க வைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறார் டான் லில்ஸ். அதுமட்டுமல்ல உரிய நேரத்தில் நாராயணமூர்த்திக்கு டான் லில்ஸ் பணத்தையும் செட்டில் செய்யமாட்டாரம். ஆனாலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாராயணமூர்த்தி கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுத்துக் கொண்டிருக்கிறார்.
''தி எர்லி லைஃப் ஆஃப் சுதா அண்ட் நாராயணமூர்த்தி'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இந்த தகவல் இடம் பெற்றிருக்கிறது. நாராயணமூர்த்திக்கு அவரது அம்மா சிறு வயது முதலே சொல்லிக்கொடுத்து வளர்த்த விஷயம் என்னவென்றால், வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளிகளிடம் நாம் நடந்துக் கொள்ளும் விதம் தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் என்பதேயாகும். இதனை தனது மனைவி சுதாவிடம் தெரிவித்த நாராயணமூர்த்தி, அமெரிக்காவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தையும் சொல்லியிருக்கிறார்.
அதேபோல் இன்போசிஸ் தொடக்கக் காலத்தில், இன்போசிஸில் பணியாற்ற சுதா விருப்பம் தெரிவித்த நிலையில் அதனை நாராயணமூர்த்தி மறுத்திருக்கிறார். ஒரே நிறுவனத்தில் இருவரும் இருந்தால் கணவன் மனைவி என குடும்ப நிறுவனங்கள் சந்தித்த விமர்சனங்களை நாமும் சந்திக்க வேண்டியது வரும் என்ற தயக்கமே இதற்கு காரணமாகும்.












Click it and Unblock the Notifications