’ராக்வெல்’ தமிழ்நாட்டுக்கு வரும் ஆட்டோ ராட்சசன்..ஒரகடமே இனி ஒளிர போகுது! அமைச்சர் சொன்ன அல்வா தகவல்!
சென்னை: ஆட்டோமேஷன் துறையில் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலையை விரிவுபடுத்த இருக்கும் நிலையில், இது தமிழக இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்பு வழங்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

ஹூண்டாய் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழகத்தில் தான் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, ஹீரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தமிழகத்தில் தங்கள் வாகனங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
தமிழகம் முன்னணி: இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குறிப்பாக வின்பாஸ்ட் , ராக்வெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமேஷன் நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் தனது தொழிற்சாலையை விரிவுப்படுத்துவதாக கூறி இருக்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.
டிஆர்பி ராஜா: தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர்,”அமெரிக்க தொழில்துறை நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன் அதன் உற்பத்தி மையத்தை சென்னையில் புதிய வசதியுடன் விரிவுபடுத்த இருக்கிறது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மேம்பாட்டு உற்பத்தி மையமாகவும் இந்தியாவின் மேம்பட்ட உற்பத்தி தலைநகராக தமிழகத்தின் நிலையை உறுதிப்படுத்தி உள்ளது. வரும் ஆண்டுகளில் மேம்பட்ட உற்பத்தி துறையில் தமிழ்நாடு காணப்போகும் புதிய முதலீடுகளின் தொடக்கம் இது

ராக்வெல் ஆலை: இந்த விரிவாக்கம் ஜனவரி 2024 டாவோசில் உள்ள டிஎன் பெவிலியனில் நடந்த பேச்சுவார்த்தை மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ராக்வெல் ஆட்டோமேஷன் சிஇஓ பிளேக் மோரெட்டை சந்தித்தபோது தொழில்துறை ஆட்டோமேஷனில் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கும் பற்றி பேசினோம். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய முதலீடுகளை குறிப்பிட்டுத் தகுந்த அளவில் ஈர்த்து வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: நமது வலுவான உற்பத்தி திறன்களையும் இது வெளிப்படுத்துகிறது. ஒரகடத்தில் அமைய உள்ள புதிய ராக்வெல் உற்பத்தி மையம் தமிழகத்தின் உற்பத்தி சூழலை மேலும் மேம்படுத்தும். 2025ஆம் ஆண்டில் முதல் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த அதிநவீன தொழிற்சாலை தமிழகத்தின் இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாவதற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும்” என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications