தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம்.. வழக்கு பாய்ந்த நிலையில் தனி விமானத்தில் திடீர் விசிட்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சர்ச்சைப் பதிவு தொடர்பாக வழக்கு பாய்ந்த நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் 5 பேருடன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவல் பணி, தேசிய விளையாட்டு போட்டி தொடர்பான பணிகளுக்காக டெல்லி சென்றிருப்பதாக ஆதவ் அர்ஜூனா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் டெல்லி பயணம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கரூர் துயரச் சம்பவம்
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்த வழக்கு
ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு அதை நீக்கியிருந்தார். இந்த பதிவு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆதவ் அர்ஜுனா மீது ஐந்து பிரிவுக்ளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 192, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 196 (1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை வளரக்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள், பிஎன்எஸ் 197 (1) (d) இந்திய இறையாண்மை ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல், 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைக்கும் அறிக்கைகள், தவறான தகவல்கள், வதந்தி வெளியிடுவது, 353 (2) பொது தீமைக்கு வழிவகுப்பது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்
ஆதவ் அர்ஜுனா சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தான் இருந்து வந்தார். நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். கரூர் பெருந்துயரம் காரணமாக கொஞ்சம் டிஸ்டர்ப்பாக இருக்கிறது, வழக்குப்பதிவு பற்றி கவலையில்லை.. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சர்ச்சைப்பதிவு தொடர்பாக வழக்கு பாய்ந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் 5 பேருடன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவல் பணி, தேசிய விளையாட்டு போட்டி தொடர்பான பணிகளுக்காக டெல்லி சென்றிருப்பதாக ஆதவ் அர்ஜூனா தரப்பில் கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர்களுடன் டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆதவ் அர்ஜுனா எதற்காக டெல்லி செல்கிறார்? யாரை சந்திக்கிறார் என்பது குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
மதுரை: அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications