பல ஆண்டு கனவு.. தி நகர் பக்கம் போறீங்களா? அப்போ இதை படிங்க.. இனிமே எல்லாமே மாறப்போகுது
சென்னை: சென்னையில் உள்ள இரண்டு முக்கியமான பேருந்து நிலையங்கள் அடையாளமே தெரியாமல் மாற உள்ளன. தற்போது மிக பழமையாக் இருக்கும் தியாகராய நகர் பேருந்து நிலையம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. அதேபோல் தி நகர் பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று சட்டசபையில் சென்னையில் அமைந்துள்ள 10 சுரங்க பாதைகள் ₹8 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தியாகராய நகர் பேருந்து நிலையம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் . போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ₹30 கோடி செலவில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும்.
தி நகர்: தற்போது மிக பழமையாக் இருக்கும் தியாகராய நகர் பேருந்து நிலையம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இந்த பேருந்து நிலையம் அடியோடு மாற்றப்படும். பேருந்து நிலையத்தில் அடிப்படையாக பல மாற்றங்கள் செய்யப்படும். உலக தரத்திற்கு இது உயர்த்தப்படும்.
அதேபோல் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படவுள்ள திரு.வி.க. நகர் பேருந்து நிலையப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?: தி நகர் மற்றும் திரு.வி.க. நகர் பேருந்து நிலைய பணியில் செய்யப்படும் மாற்றங்களில் பின்வரும் மாற்றங்கள் அதிகம் கவனம் பெறும்.
பேருந்தின் முகப்பு தோற்றம் மொத்தமாக மாற்றப்படும்.
பேருந்து நிலையத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
பேருந்து நிலையத்தில் இருக்கைகள் நவீனம் ஆக்கப்படும்.
உள்ளே இருக்கும் போர்டுகள் டிஜிட்டல் வகைகள் மாற்றப்படும்.
விளக்குகள் தொடங்கி திரைகள் வரை எல்லாம் நவீனம் ஆக்கப்படும்.
விமான நிலைய ஸ்டைலில் நுழையவோ மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்படும்.
அதேபோல் உள்ளே லிப்டில் செல்லும் விதமாக அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படும்.
மேழும் புதிய உணவகங்கள், கடைகள் அமைக்கும் விதமாக உள்ளே புதிய காம்பிளக்ஸ் அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் தியாகராய நகர் பேருந்து நிலையம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் .
முக்கிய அறிவிப்புகள்: நேற்று சட்டப்பேரவையில் சென்னை மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு.
சென்னையில் ₹40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ₹10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ₹15 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும். மேலும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ₹7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை உள்ள மெரினா பாரம்பரிய வழித்தடம் ₹10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னையின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் ₹5 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications