உச்ச நீதிமன்ற படியேறிய திமுக அமைச்சர்கள்.. தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் வழக்கு.. ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மேல்முறையீடு வழக்குகளை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் சுயமாக உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
பொன்முடி மேல்முறையீடு: பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும் அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார். இந்த வழக்கில் பொன்முடி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அடுத்தடுத்த வழக்குகள்: இதையடுத்து ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன.
சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க நடத்தப்பட உள்ளது.
சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வர உள்ளது.
விசாரணைக்கு எதிர்ப்பு; இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
அதன்படி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மேல்முறையீடு வழக்குகளை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்.. இதில் யாரும் மேல்முறையீடு செய்யாமல்.. சுயமாக உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications