Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 உரிமைத்தொகை! 79.66 லட்சம் விண்ணப்பம்! முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை-ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான முதற்கட்ட முகாம் இன்று முடிவடைய நிலையில் நாளை 2ம் கட்ட முகாம் தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Amid of 79.66 lakhs application CM Stalin hold important meeting on Kalingar Enti Rs.1000 Stipend Scheme

இதையடுத்து தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள குடும்ப தலைவிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியானது.

அதன்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மறைந்த முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படட்டது.

இதையடுத்து 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்துக்கு மக்கள் விண்ணப்பம் செய்வதற்கான முகாம்கள் துவங்கின. குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் உரிமைத்தொகைக்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் பூர்த்தியிட்டு வழங்கி வருகின்றனர். முதற்கட்ட முகாம் என்பது இன்றுடன் முடிவடைய உள்ளது. முதல்கட்டமாக முகாமில் நேற்று வரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் நாளை முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவதாக தகவல்கள் வெளியானது.

அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்ங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, ஐ பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, பெரியகருப்பன், அன்பரசன், கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்துக்கான முதற்கட்ட முகாம் எப்படி நடந்தது என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் சிறப்பு முகாம்கள் பற்றியும், விண்ணப்ப பதிவில் பிரச்சனை ஏதேனும் உள்ளதா? என்பது பற்றி கேட்டறிந்தார். அதோடு தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை உள்பட அனைத்து நலத்திட்டங்களும் முறையாக கொண்டு சேர வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+