திமுக - காங். மோதலில் போகஸ் இருந்தப்போ.. சட்டென அதிமுக பக்கம் லைட்டை திருப்பிய அண்ணாமலை.. போச்சு
சென்னை: திமுக காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு இடையே சட்டென பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணி பக்கம் லைட்டை திருப்பியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 24 மணி நேரமாக திமுக - காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. திமுக எம்பி திருச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது, கலைஞர் கருணாநிதி என்னை காரில் அழைத்து செல்வார். எனது 23, 24 வயதில் என்னிடம் அவர் கூறுவார். சில பேர் இதை நினைப்பாங்க, என்ன சின்ன பையனிடம் போய் சொல்கிறார் என்று.. ஆனால் அவருக்கு தெரியும்.. இதை போய் நான் கூட்டத்தில் பேசுவேன் என்று.. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று தெரியும். அதனால் என்னிடம் நிறைய பேசுவார். அப்போது ஒரு நாள் காமராஜர் வந்து தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டன கூட்டம் போடுறார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் அலர்ஜி வந்துவிடும். அதற்காக நான், அவர் தங்குகிற விடுதிகளில் எல்லாம் ஏசி வசதி செய்ய உத்தரவு கொடுத்தேன். ஆனால் என்னை எதிர்த்து தான் கூட்டம் போடுகிறார் என்று சொன்னார்.

இதேபோல், காமராஜரை அவசர காலத்தில் கைது செய்ய துடித்தனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி போக இருந்தார். உடனே திமுகவின் தலைமையகத்தில் இருந்து அவருக்கு போன் சென்றது. தயவு செய்து நீங்க திருப்பதி போக வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதற்கு நான் திமுக காரன் இல்லை. காங்கிரஸ்.. என்னை தடுக்க நீங்க யார்.. என்று குறிப்பிட்டார்.
ஜோதிமணி பதிலடி
இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர்போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திருச்சி சிவா சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது என்று விமர்சனம் வைத்துள்ளார். இது காங்கிரஸ் திமுக இடையிலான மோதலாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட கூட்டணிக்கு உள்ளேயே மிகப்பெரிய பூதாகரமான மோதலாக வெடித்து உள்ளது.
அதிமுக பக்கம் லைட்டை திருப்பிய அண்ணாமலை
திமுக காங்கிரஸ் இடையிலான மோதலுக்கு இடையே சட்டென பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணி பக்கம் லைட்டை திருப்பியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.
கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, இதற்கு அதிமுகதான் தலைமை என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுகதான் தலைமை என்றாலும்.. ஆட்சி தனித்த ஆட்சி அல்ல.. அதிமுக - பாஜகவின் கூட்டு ஆட்சிதான், அதாவது ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறி இருந்தார்.
அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications