சாரிங்க.. 60 : 40 தாங்க.. அமித் ஷா சொன்ன வார்த்தை.. விக்கித்து போய் நின்ற எடப்பாடி.. என்ன நடந்தது?
சென்னை: அமித்ஷா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமுகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. எடப்பாடியின் நடவடிக்கையில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார்.
இரவு 8:15-க்கு எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எட்டு மணிக்கெல்லாம் அதிமுகவினர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று விட்டனர். காத்திருந்தார்கள். 9 மணிக்குத்தான் அமித்ஷாவை சந்திக்க முடிந்தது. காத்திருக்க வைத்த சூழலை அவர்களிடம் சொல்லி, ஸாரி என்றிருக்கிறார் அமித் ஷா. அமித் ஷா எடப்பாடியிடம் மிகவும் சகஜமாக பேசி உள்ளார். கூட்டணி உடைந்த கோபம், அதிமுக - பாஜக இடையே உள்ள மோதலை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசி உள்ளார். ஆனால் அதே சமயம் சில விஷயங்களை அடித்து சொல்லி இருக்கிறார்.

சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் தொடர்பாகவே இருந்தது. பேச்சுவார்த்தையில் எடப்பாடி பேசியதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து அமித்ஷாவுக்கு தம்பிதுரை விளக்கினார். கூட்டணி குறித்து பேச்சு எழுந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைத்துக் கொள்ளும் விவகாரம் வந்தது. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால் அதிமுக பிளவு இல்லாமல் இருப்பது அவசியம் தானே! ஓபிஎஸ், சசிகலா, தினகரனை சேர்த்துக் கொள்வதில் என்ன சிக்கல்? என்று அமித்ஷா கேட்டுள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி என்ன சிக்கல்?
அதற்கு எடப்பாடி, "பாஜகவுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு சம்மதம். ஆனால், அவர்களைச் சேர்த்துக் கொள்ளமட்டும் வலியுறுத்தாதீர்கள். மீண்டும் அவர்களை சேர்த்துக் கொண்டால் குழப்பம்தான் அதிகரிக்கும் " என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், ஓபிஎஸ்சை மட்டுமாவது சேர்த்துக் கொள்ளலாம் என இரண்டாம் நிலை தலைவர்கள் விரும்புகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் ஓபிஎஸ்சை சேர்க்க ஆட்சேபனை இல்லை. மற்றவர்களை வலியுறுத்த வேண்டாம் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
சீட் ஷேரிங் பற்றி விவாதிக்கப்பட்ட போது, பாஜகவுக்கு என தனியாக அமித் ஷா பேசவில்லை. மாறாக, 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ' என்று தான் பேசியுள்ளார். அதாவது, அதிமுகவுக்கும் என்.டி.ஏ.வுக்கு 234 தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று அமித்ஷா சொல்ல, எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் ஏற்க மறுத்தனர். பல்வேறு சதவீத கணக்குகள் சொல்லப்பட்டு, அதிமுகவுக்கு 70 சதவீதம், என்.டி.ஏ.வுக்கு 30 சதவீதம் என்று அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டன.
அதிமுக - பாஜக கூட்டணி இடங்கள்
30 சதவீத இடங்களில் ஓபிஎஸ், தினகரன் உள்பட யாரையெல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக விருப்பப்படுகிறதோ அந்த கட்சிகளுக்கு பாஜக தான் சீட் ஒதுக்கித் தந்து கொள்ள வேண்டும். அதிமுகவுக்கான 70 சதவீத இடங்களில் ஒரு சீட் கூட கேட்டு நெருக்கடித்தரக்கூடாது என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதேசமயம், அமித் ஷாவோ, 60 : 40 என பகிர்ந்து கொள்ளலாம். 40 சதவீத இடங்களை என்.டி.ஏ. வுக்கு ஒதுக்குங்கள். கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சீட் தந்து கொள்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறார்.
இரு தரப்பும் முன் வைக்கும் சதவீத கணக்கினால் சீட் ஷேரிங் மட்டும் முடிவாகாமல் இருக்கிறது. மற்றபடி கூட்டணி உறுதியாகி உள்ளது என்கின்றனர் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள்.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?











Click it and Unblock the Notifications