எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஓகே! டிடிவி தினகரன், ஓபிஎஸ் கதை என்ன? அமித்ஷா பதில்
சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி களமிறங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார். அதே நேரம் டிடிவி தினகரன், ஓபிஎஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி கவனம் பெற்றிருக்கிறது.
இதிற்கு பதிலளித்த அமித்ஷா, "அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டா். அதே நேரம் என்டிஏ கூட்டணியில் அதிமுக எந்த வித நிபந்தனைகளுமின்றி இணைந்து உள்ளதாகவும் அமித்ஷா கூறியிருக்கிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, 2021 சட்டமன்ற தேர்தல் தோல்வி, இடைத்தேர்தல் தோல்வி என அதிமுக தொடர்ந்து சறுக்கல் பாதையில்தான் சென்றுக்கொண்டிருக்கிறது. 60க்கும் அதிகமான எம்எல்ஏக்களை கொண்டிருந்தும், 4 எம்எல்ஏக்களை கொண்டிருக்கும் பாஜக செய்யும் அரசியலை கூட அதிமுக செய்யவில்லை. திமுக தலைமையிலான அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசை வேலை செய்ய வைக்கவில்லை என்கிற புகார் அதிமுக மீது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனை சரி செய்ய வேண்டும் எனில் பழைய 'கை'களை உள்ளே இறக்க வேண்டும் என்று அதிமுகவில் உள்ளவர்கள் குரல் கொடுக்க தொடங்கினர். யார் இந்த பழைய கைகள்? என்றால், டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இவர்களை சேர்த்துக்கொள்ள எடப்பாடி தயாராக இல்லை. போதாத குறைக்கு வழக்குமேல் வழக்கு போட்டு எடப்பாடியை கோர்ட்டுக்கும், வீட்டிற்கும் நடையாய் நடக்க வைத்தவர்கள் இவர்கள். இவர்களை எப்படி கட்சிக்குள் சேர்ப்பது? இனி இதுபோன்ற பேச்சை தூக்கிக்கொண்டு வராதீர்கள் என எடப்பாடி கறாராக சொல்லிவிட்டார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான் பாஜக-அதிமுக கூட்டணி இறுதியாகியிருக்கிறது. அப்படியெனில் டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? என்று கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அமித்ஷா இது சம்பந்தமாக வெளிப்படையாக எதுவும் பேசமாட்டார்தான்.
இருப்பினும் ஏதாவது பொடி வைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ சிம்பிளாக என்ட் கார்ட் போட்டுவிட்டார். உட்கட்சி மேட்டர்களில் நாங்கள் தலையிடுவதில்லை என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல திமுகவை அட்டாக் செய்ய தொடங்கிவிட்டார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications