லெட்டர் எழுதி கொடுங்க.. விஜயிடம் கேட்ட அமித் ஷா.. திக்கு தெரியாமல் நிற்கும் விஜய்.. அரசியல் கசக்குதே
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் முக்கியமான லெட்டர் ஒன்றை வாங்க டெல்லி பாஜக முயற்சித்து வருகிறதாம். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பாக விஜயிடம் பேச முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
1. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது விஜய் கடுமையான அழுத்தத்தில் உள்ளார். அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன.

2. ஒன்று கரூர் வழக்கு. இது கண்டிப்பாக அவருக்கு எதிராக திரும்பும். ஆளும் திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக இருப்பதால்.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதற்றத்தோடு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜென்ரேட்டை அறையை உடைத்த தொண்டர்களை கண்டிக்காமல் போனது, மீட்பு பணிகளுக்கு கூட உதவாமல் போனது என்று விஜய் மீது நிறைய தவறுகள் உள்ளன. அவருக்கு எதிராக ஆதாரங்களும் உள்ளன.
3. இதையடுத்தே விஜய் அரசியல் சாணக்கியரிடம் தீவிரமாக ஆலோசனை செய்து இருக்கிறாராம். 3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், வழக்கு என்று வந்தால் திமுகவை தடுக்க முடியாது. திமுக ஐடி விங் தவெக கதையை முடித்துவிடும். அவர்களை என்னால் எதிர்க்க முடியாது. நீங்கள்தான் உதவ வேண்டும். டெல்லி உதவியை நீங்கள்தான் பெற்று தர வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
4. இந்த நிலையில்தான் டெல்லி உங்களுக்கு கண்டிப்பாக உதவும். நீங்கள் பாஜக கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று அழுத்தம் விடுக்கப்படுகிறதாம்.
5. விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது. நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு எதிராக உள்ளது.
6. இந்த நிலையில்தான் முதலில் தமிழக போலீஸ் விஜய் பக்கமே நெருங்க கூடாது என்று டெல்லி நினைக்கிறதாம். இதற்காக அவருக்கு CRPF பாதுகாப்பு தர நினைக்கிறார்கள். இதற்காக அவரிடம் கடிதம் கொடுங்கள் என்று கேட்கப்பட்டு உள்ளது.
7. இன்னொரு பக்கம் எங்கள் கூட்டணிக்கு வாங்க.. நம்முடைய ஒரே எதிரி திமுகதான். அவர்களை சேர்ந்து வீழ்த்தலாம் என்று அமித் ஷா அழுத்தம் கொடுத்துள்ளாராம்.
8. ஆனால் விஜயோ.. மாற்று அரசியல் என்று பேசினோம்.. கொள்கை எதிரி என்று பாஜகவை கூறினோம்.. இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் ரசிகர்களே நம்மை எதிர்ப்பார்கள் அது சரிப்பட்டு வருமா என்று கடும் மனக்குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.












Click it and Unblock the Notifications