நேரம் நெருங்கிருச்சு..எடப்பாடிக்கு பிரஷர் கொடுக்கும் அமித்ஷா! பிரேமலதா பக்கம் திருப்பி விட்ட அதிமுக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தேமுதிக சேருமா இல்லையா என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக இழுபறியில் நீடித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக-பாஜக தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என பாஜக மேலிடம் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில்தான், தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அதிமுக தலைமை தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தேமுதிக கூட்டணி
கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 21 சட்டமன்றத் தொகுதிகள், அதனுடன் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி ஆகியவை கோரப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வேட்பாளர்களுக்கு இணையான அளவில் தேர்தல் செலவுகளை அதிமுக மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பு அதிகபட்சமாக 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், தற்போதைய நிலையில் ராஜ்யசபா சீட் வழங்குவது சாத்தியமில்லை என்றும் தெளிவாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இதன் காரணமாகவே கூட்டணி பேச்சுவார்த்தை முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இதற்கிடையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, தேமுதிக தரப்பு திமுகவிடமும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்றதாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் தேமுதிகக்கு 7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இரு பக்கமும் பேரம் பேசும் போக்கு அதிமுக தலைமையை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவின் நிலைப்பாடு
இதனைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முடிவை தெளிவாக அறிவியுங்கள். இல்லையெனில், மாற்று அரசியல் ஏற்பாடுகளை நாங்கள் பார்க்க வேண்டிய நிலை வரும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கறாராக தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்த தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பிரேமலதா விஜயகாந்த்
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, ஜனவரி மாதம் 9ஆம் தேதி கட்சியின் மாநாடு நடக்கும் அப்போது கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறி இருந்தார். மாநாடு முடிந்து ஆனால் மாநாடு முடிந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் கூட்டணி குறித்து எந்த விதமான அறிவிப்பையும் பிரேமலதா விஜயகாந்த் வெளியிடவில்லை.
அமித் ஷா அழுத்தம்
திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் என மூன்று தரப்புடனும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில், அந்தக் கட்சிகள் அனைத்துமே அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதால் அதற்கு முன் கூட்டணியை இறுதிச் செய்ய வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. சீக்கிரம் கூட்டணியை இறுதி செய்ய வேண்டுமென அமித்ஷாவும் நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.அதனால் தான் தற்போது எடப்பாடி தேமுதிகாவுகு கெடு விதித்துள்ளார் என்கின்றனர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications