ஆப்படிச்சுட்டாரே அமித்ஷா.. தமிழக பாஜகவினர் வயிற்றில் புளியை கரைத்த ஃபார்முலா? கலக்கத்தில் கமலாலயம்!
சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில், கட்சியின் முக்கிய தலைவரான அமித்ஷா ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வேட்பாளர்களில் 80 சதவீதம் பேர் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிலிருந்தும், 20 சதவீதம் பேர் மாநில நிர்வாகிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும், யாருடைய சிபாரிசும் இன்றி அமித்ஷாவே நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் சென்னை வந்தார். அவருடன் இணை பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வாலும், முரளிதர் மொஹோலும் இருந்தனர்.
இவர்கள் அனைவரும் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தினர். அதன் பின்பு, அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

2026 சட்டமன்ற தேர்தல்
அந்தச் சந்திப்பில், மத்திய உளவுத்துறை மற்றும் தேர்தல் வியூகம் அமைக்கும் ஒரு நிறுவனம் சேர்ந்து ஆய்வு செய்த 50 முக்கிய தொகுதிகளின் பட்டியலை பாஜக தரப்பு அ.தி.மு.க.விடம் வழங்கியது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், பாஜக. தரப்பு குறைந்தபட்சம் 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பு, தற்போது 30 தொகுதிகள் அளவுக்கு தான் ஒதுக்கத் தயாராக உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக வேட்பாளர் தேர்வு
இதற்கிடையில்,பாஜக தரப்பில் எந்தத் தொகுதிகளில் யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக தமிழக பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். அந்த ஆலோசனையின் அடிப்படையில் தான் இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவாகும் என்று கூறப்படுகிறது. பாஜக தரப்பு, மக்கள் தொடர்பு வலுவாக உள்ளவர்கள், அடிப்படை மட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர்கள், ஓட்டுச்சாவடி மட்டம் வரை செயல்பட்டவர்கள் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.
மாவட்ட நிர்வாகிகள்
அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., கவர்னர், மத்திய அமைச்சர் போன்ற பதவியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. மேலும், குற்ற பின்னணி உள்ளவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வு முறையில், மாவட்ட மட்ட நிர்வாகிகளுக்கு 80 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால், கட்சியில் நீண்ட காலமாக உழைத்து வந்த நிர்வாகிகளுக்கு இது ஊக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தொகுதி ஒதுக்கீடு
ஆனால் இதனால் தேர்தல் முடிவில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் உருவாகியுள்ளது. மொத்தத்தில், தமிழகத்தில்பாஜக இந்த முறை திட்டமிட்ட முறையில் தேர்தலை எதிர்கொள்ள முயற்சி செய்து வருகிறது என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன. இந்த முறை வேட்பாளர் தேர்வில் அமித்ஷாவே நேரடியாக களமிறங்க இருக்கிறார். பியூஸ் கோயல் அளிக்கும் பட்டியலை அமித்ஷா தான் இறுதி செய்வார் என கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் தலைவர்கள் பலர் கலக்கத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த முறை தங்களுக்கு சீட்டு கிடைக்குமா என்ற குழப்பமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications