எடப்பாடி பழனிசாமிக்கு கோல்டன் வாய்ப்பு? அமித்ஷா தந்த பார்ட்னர்ஷிப் ட்விஸ்ட்! அப்ப 2.5 வருட கண்டிஷன்?
சென்னை: திருச்சி பஞ்சப்பூர் மாநாட்டின் மேடையில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கியபோது, அது வெறும் தேர்தல் கூட்டணியின் தொடக்கம் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த புன்னகைக்கு பின்னால் அதிமுகவின் ஒட்டுமொத்த அதிகார மையத்தையே அசைத்து பார்க்கும் ஒரு மாஸ்டர் பிளான் ஒளிந்திருக்கும் என எடப்பாடி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்போது கோட்டைக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் இந்த நிழல் யுத்தத்தில், அதிமுகவின் எதிர்காலம் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா என ஆளுமைகள் இருந்தவரை, தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளின் நிழலில் தான் ஒதுங்கின.

அமித்ஷா தந்த 2.5 வருட டீல்
"ஆட்சியில் பங்கு" என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் எனப் பல திசைகளில் சிதறிய அதிகார போட்டிகளும் பாஜகவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.
ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை, அதன் பலவீனத்தை பயன்படுத்தி வளைப்பதே தமிழகத்தில் தாமரையை மலரவைக்க எளிதான வழி என பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னான வாய்ப்பு
சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு, தொகுதி பங்கீட்டிற்கானது என்று வெளியில் சொல்லப்பட்டாலும், உள்ளே நடந்த விவாதங்கள் வேறு ரகம். வடமாநிலங்களில் பாஜக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பார்ட்னர்ஷிப் ஆட்சி முறையை தமிழகத்திலும் திணிக்க அமித்ஷா தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் சரிபாதி பங்கு அல்லது சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதே அந்த அதிரடி திட்டமாகும்.
இதையெல்லாம் விட எடப்பாடியை அதிகம் அப்செட் ஆக்கிய விஷயம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக காட்டும் அதீத ஆர்வம்தானாம்.. அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் பிரிப்பார் என்று தெரிந்தே, அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பாஜகவின் போக்கு எடப்பாடியை கடும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளதாம்..
பார்ட்னர்ஷிப் கசப்பு மருந்து
தனது அரசியல் எதிர்காலத்தையே பாஜக குழிதோண்டி புதைத்துவிடுமோ என்ற அச்சம் இப்போது அதிமுக மேலிடத்தில் நிலவ துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.. ஆனாலும், டெல்லியின் தாளத்திற்கு ஆட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருப்பதால், இந்த பார்ட்னர்ஷிப் கசப்பு மருந்தை விழுங்குவாரா அல்லது புதிய பாதை தேடுவாரா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்..
நம்முடைய தமிழக அரசியலை பொறுத்தவரை, திராவிட இயக்கங்கள் எப்போதுமே தன்னாட்சி அதிகாரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. இப்போது பாஜக முன்வைப்பதாக கூறப்படும் இந்த கூட்டு ஆட்சி அல்லது பகிர்வு முறை என்பது அதிமுக போன்ற ஒரு வலிமையான கட்டமைப்பை கொண்ட கட்சிக்கு தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே பார்க்கப்படும். தொண்டர்கள் மத்தியில் இது ஒருவிதமான பின்னடைவை கண்டிப்பாக ஏற்படுத்தக்கூடும்.
புதிய சமன்பாடு உருவாகுமா
இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் தரப்பை எதிர்க்க ஒரு வலுவான கூட்டணி தேவை என்பதை மறுப்பதற்கில்லை. பாஜகவின் இந்த வியூகம் அதிமுகவை பலவீனப்படுத்துமா அல்லது விஜய்யை உள்ளே இழுப்பதன் மூலம் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்குமா என்பதெல்லாம் வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.
அத்துடன் எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் முடிவு, அவரது தனிப்பட்ட அரசியல் வாழ்வை மட்டுமின்றி, அதிமுக என்ற பேரியக்கத்தின் அடையாளத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
- நமது சிறப்பு நிருபர்
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications