இருளில் தமிழகம்! இருமுறை பிரதமராகும் வாய்ப்பை இழந்த தமிழர்கள்.. அமித்ஷா சொன்ன அந்த இருவர் யார்?
சென்னை: தமிழகம் இருளில் இருக்கிறது என்பது நான் சென்னைக்கு வந்த போது மின்துண்டிப்பு ஏற்பட்டதிலிருந்தே தெரிகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமையும். நான் சென்னை விமான நிலாயம் வந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனது வருகையின் போது மின்சாரம் துண்டிப்பு தமிழகம் இருளில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்திற்கு பாஜக வெளிச்சம் தரும்.
மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பை திமுக இரு முறை இழந்துவிட்டது என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பை திமுக இரு முறை இழந்துவிட்டதாக அமித்ஷா சொல்லும் நிலையில் அந்த இருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் அமித்ஷா சொல்வதையெல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. அவர் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை.
எங்களுக்கு தெரிந்து பிரதமர் ரேஸில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இதில் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். அப்போது அவர் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை வேண்டாம் என சொல்லிவிட்டு இந்திரா காந்தியை பிரதமராக்குமாறு கூறிவிட்டார். அதனால்தான் நாம் காமராஜரை கிங் மேக்கர் என அழைக்கிறோம்.
அது போல் 1990 களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது. லோக்சபா தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகள் கை ஓங்கிய காலம். அப்போது திமுக ஆதரித்தால் மூப்பனார் பிரதமராவார் என பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புக்கு அவருக்கு ஏனோ கிடைக்காமல் போய்விட்டது. எனவே இவர்கள் இருவரை வைத்துதான் அமித்ஷா பேசியிருக்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தார்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications