Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"துண்டு" சேருதா.. டிடிவி சாரின் "நலன் விரும்பிகள்".. சி.ஆர்.சரஸ்வதி சொல்றது புரியுதா.. அப்ப எடப்பாடி

எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து சிஆர் சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடிக்கிட்ட ஒரு கூட்டம் இருக்கே, அந்த கூட்டமும் முடிவு செய்ய முடியாது.. அந்த கூட்டம், அவர்கிட்ட ஏன் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும் என்று அமமுக சிஆர் சரஸ்வதி விமர்சித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

 குஷி சந்தோஷம்

குஷி சந்தோஷம்

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சிஆர் சரஸ்வதி நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் வெளிப்படுத்தி உள்ள கருத்துக்கள்தான் இவை:

 டிடிவி சார்

டிடிவி சார்

"அம்மாவின் விருப்பப்படி, அம்மாவின் ஆட்சி மறுபடியும் வரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கக்கூடிய கட்சிகளுடன்தான் கூட்டணி என்பதை எங்கள் பொதுச்செயலாளர் டிடிவி சார் மிக தெளிவாக சொல்கிறார்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, நடந்த விஷயங்களை உணர்ந்து, இனி தவறு நடக்க கூடாது என்பதையும் ஒப்புக் கொண்டுவிட்டார்.. மீண்டும் அம்மா ஆட்சி வரவேண்டும் என்றால் எல்லாரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளார்.. புரட்சித்தலைவர் மறைந்து ஒரு பிரிவு வந்தபோது எல்லாரும் ஒன்றிணையவே செய்தார்கள்.. அம்மா மறைவுக்கு நடந்த வரலாறு எல்லாருக்குமே தெரியும்..

 டைம் இருக்கு

டைம் இருக்கு

என்னைக்குமே அமமுக, அதிமுகவுடன் போய் சேரும் என்று சொன்னதே கிடையாது.. மத்தியில் இருக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி என்று சொல்லி உள்ளார்.. அதாவது காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி என்று சொல்லி உள்ளார்.. காலத்தின் கட்டாயப்படி, யாரிடம் கூட்டணி நேருமோ அவர்களிடம் சேருவோம்.. ஒருவேளை இரு கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டாலும் தனித்து அமமுக தேர்தலை சந்திக்கும் என்றும் எங்கள் பொதுச்செயலாளர் சொல்லி உள்ளார்.. இன்னும் டைம் இருக்கு..

 முட்டி போட்டார்

முட்டி போட்டார்

அம்மா ஆட்சி வரணும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால், 2021-லேயே கூட்டணிக்கு சம்மதித்து இருப்பார்.. உண்மையான அதிமுக தொண்டராக இருந்திருந்தால், எப்பவோ கூட்டணி வைத்திருப்பார்.. ஆனால் அவர் யாருக்குமே உண்மையாக இல்லை.. யாரால் வந்து பதவியில் உட்கார்ந்தாரோ, எப்படி முட்டி போட்டு வந்தாரோ அதையும் மறக்கிறார்.. யாருடன் நாலரை வருஷம் கைகோர்த்துக் கொண்டு இருந்தாரோ, அதையும் மறக்கிறார்.. தேவைப்படும்போது எல்லாரையும் உபயோகப்படுத்திக் கொள்கிறார், தேவையில்லாதபோது, தேவை முடிந்ததும் தூக்கி போட்டுடறார்.. அவர் அரசியல் கணக்கே புரியவில்லை.. யாராக இருந்தாலும் சரி, உதவி செய்தவர்களை நாம் மறக்க கூடாது..

அட்லீஸ்ட்

அட்லீஸ்ட்

நன்றி மறக்கவும் கூடாது, நம்பிக்கை துரோகம் செய்யவும் கூடாது.. அது இரண்டையுமே அவர் செய்துட்டு இருக்கார்.. வரவேண்டிய ஆட்சியை தூக்கி திமுகவுக்கு தந்துட்டார்.. அன்னைக்கு எல்லாரும் நின்றிருந்தால், மத்தியில் இருந்து வந்த நலன்விரும்பிகள் சொன்னதை கேட்டிருந்தால், அம்மா ஆட்சி அப்படியே தொடர்ந்திருக்கும்.. எடப்பாடி தவறு, தான் என்ற எண்ணம், திமுக ஆட்சி வந்தாச்சு.. சரி, அட்லீஸ்ட் இப்பவாவது, அம்மா ஆட்சி வரணும் என்று தொண்டர்கள் விரும்பும்போது, அதற்கு உறுதுணையாக எடப்பாடியோ, அவருடன் இருப்பவர்களோ இல்லையென்றால், அவர்கள் நிச்சயம் அம்மாவின் தொண்டர்கள் கிடையாது..

 2000 +

2000 +

மறைமுகமாக திமுகவே மறுபடியும் வரவேண்டும் என்று நினைத்தால் அந்த நிலைப்பாட்டிலேயே எடப்பாடி இருக்கட்டும்.. அதிமுக யாருக்கு என்று முடிவு முதலில் வரட்டும், 2 ஆயிரம் பேர் நிர்ணயிப்பவர்கள்தான் தலைமை என்பது அதிமுகவில் கிடையவே கிடையாது.. அதை தலைவரும் விரும்பியது இல்லை, அம்மாவும் விரும்பியது இல்லை.. புரட்சித்தலைவர் வகுத்த விதிப்படி, பொதுச்செயலாளர் பிரச்சனை வந்தால், தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும், பொதுக்குழு செயற்குழு, எம்எல்ஏ, எம்பிக்களுக்கோ முடிவு செய்ய முடியாது..

 தோளில் துண்டு

தோளில் துண்டு

அதேமாதிரி எடப்பாடிக்கிட்ட ஒரு கூட்டம் இருக்கே, அந்த கூட்டமும் முடிவு செய்ய முடியாது.. அந்த கூட்டம், அவர்கிட்ட ஏன் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.. தொண்டர்கள் என்று ஒரு கூட்டம் இங்கு உண்டு.. அம்மா ஒரு வேட்பாளரை அறிவித்துவிட்டால், அடுத்த நிமிஷமே தோளில் துண்டை போட்டுக்கிட்டு, கொடியை தூக்கிட்டு போய், அம்மா அறிவித்த வேட்பாளருக்கு ஓட்டுக் கேட்கிற தொண்டர்கள் இருக்கிறார்களே, அந்த தொண்டர்கள் முடிவு செய்யட்டும், அதிமுக தலைமை யார் என்பதை. அம்மாவின் உண்மையான விசுவாசி எடப்பாடி இல்லை என்பதே எங்கள் டிடிவி சாரின் ஆணித்தரமான கருத்து" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+