திமுகவுக்கு தாவினார் அமமுக புதுக்கோட்டை மா.செ. பரணி கார்த்திக்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திக் இன்று திமுகவில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் தினகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தார். அமமுகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுக, அதிமுக என தொடர்ந்து தாவி வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைராஜனுக்கு மாநில இலக்கிய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்ச்செலனுக்கு திமுகவின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினரையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தற்போது அமமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திக் திமுகவுக்கு தாவியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரணி கார்த்திக் அக்கட்சியில் இன்று இணைந்தார்.

அதிமுகவின் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வான ரத்தினசபாபதியின் சகோதரர்தான் பரணி கார்த்திக். ரத்தினசபாபதி தினகரன் ஆதரவாளராக இருந்தவர். பின்னர் கட்சி தாவல் நடவடிக்கை பாயலாம் என்பதால் அணி மாறியவர்.
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திக், இருளில் உள்ள தமிழகத்துக்கு ஒளிவிளக்கு ஏற்றுபவர் ஸ்டாலின் என்பதால் அவரது தலைமையை ஏற்று திமுகவில் இணைந்தோம் என்றார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications