வட மாநிலத்தவர்களின் குற்றச்செயல்.. தமிழர்களின் வேலையும் பறிபோகுதாம்.. டிடிவி தினகரன் சொன்ன ஐடியா!
வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சமளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழ்நாடு இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களான பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஃபாஸ்ட் புட் கடைகள், டீ கடைகளில் அதிகளவிலான வடமாநில தொழிலாளர்களே பணி செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டட தொழில்களில் வடமாநில தொழிலாளர்களே அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள்
இதற்கு அவர்கள் சம்பளம் குறைவாக கேட்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்களை வைத்தால், அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், நிறுவன உரிமையாளர்களும் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி வருகின்றனர். அதேபோல் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டு மக்களின், இளைஞர்களின் வாய்ப்புகளை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

குற்றச்செயல்கள்
இதனிடையே திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சென்னையில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை, கோவையில் கல்லூரி மாணவர்கள் - வடமாநில தொழிலாளர்கள் இடையிலான மோதல் என வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்றும், வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான், வேல்முருகன் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துமீறிய செயல்கள் அதிகரிப்பு
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதையும் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை
பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழ்நாடு இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. மேலும், அவர்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர் குழு தேவை
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications